இளம் வீரர்கள் இதை மனதில் வைத்துக் கொண்டு விளையாடவும் – தென் ஆப்ரிக்கா டி20ஐ தொடரின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் சுரேஷ் ரெய்னா

0
56
Suresh Raina

ஐ.பி.எல் வெற்றிக்கரமாக இந்தியாவில் நடத்தி முடிக்கப்பட்டு, கிரிக்கெட் உலகம் இயல்பு நிலைக்கு வந்திருக்கிறது. வீரர்கள் அவரவர் தேசிய அணிகளுக்குத் திரும்பி இருக்கிறார்கள். சர்வதேச போட்டிகளும் ஆரம்பித்திருக்கின்றன!

இந்திய அணி வருகின்ற 9ஆம் தேதி தென்ஆப்பிரிக்க அணியோடு, ஐந்து இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் மோத இருக்கிறது. இதற்கான அணி ஐ.பி.எல் தொடரின் இறுதி நேரத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

இந்தத் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்ப்ரீட் பும்ரா, மொகம்மத் சமி ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணிக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ்கார்த்திக்கும், காயத்தால் ஒதுங்கி இருந்த ஹர்திக் பாண்ட்யாவும் திரும்பி இருக்கிறார்கள். மேலும் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகிய இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தத் தொடர் குறித்து இந்திய அணியின் பிரபல முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது “இது நிச்சயமாக முக்கியமான தொடர். நாம் ஐ.பி.எல் தொடரில் வீரர்கள் செயல்பட்டதைப் பார்த்தோம். அவர்கள் இங்கு இந்திய அணியில் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதுதான் விசயம். இந்திய அணிக்காக விளையாடுகிறோம் என்கிற மனநிலை முக்கியமானது” என்றார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ஜூன் மாதம் வெப்பம் அதிகமாக இருக்கும். இதில் நிறைய விசயங்கள் உள்ளன. உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் இருவரும் சிறப்பாகப் பந்துவீசினார்கள். கே.எல்.ராகுல் ஐ.பி.எல்-ல் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டார். இது இந்திய அணிக்கான முறை. அவர் இப்போதும் சிறப்பாகச் செயல்படுவார் என்று நினைக்கிறேன்” என்று கூறுகிறேன்!