அவர்கள் தீ போல திறமையோடு இருக்கிறார்கள்; அவர்கள்தான் ஆசிய கோப்பையை வெல்வார்கள் – ஷேன் வாட்சன் கணிப்பு!

0
54
Shane watson

வருகின்ற ஆகஸ்ட் 27-ஆம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்டில் ஐந்தாவது ஆசியக் கோப்பை போட்டி துவங்க உள்ளது. இந்தத் தொடரில் இலங்கை ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் ஒரு குழுவிலும், இந்தியா-பாகிஸ்தான் ஹாங்காங் ஒரு குழுவிலும் இடம் பெற்றுள்ளன!

குழுவில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இரண்டு குழுவிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நான்கு அடிகளைக் கொண்டு சூப்பர் 4 என்று ஒரு சுற்று நடத்தப்படுகிறது. இந்தச் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஐ கொண்டு இறுதிப் போட்டி நடக்கும். இதில் வெற்றி பெறும் அணி 15வது ஆசிய கோப்பை சாம்பியன் ஆகும்!

- Advertisement -

இந்தத் தொடர் நடத்தப்படும் அமைப்புமுறையை வைத்துப்பார்த்தால், ஒரு போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொள்வது உறுதி. அடுத்து சூப்பர் 4 என்ற சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது. எப்படியும் ஹாங்காங் அணி அந்த சுற்றுக்கு வராது. மேலும் அந்த சுற்றில் இரண்டு அணிகளும் மிகச் சிறப்பாக செயல்பட்டால் இறுதிப் போட்டியிலும் மோதிக் கொள்ள முடியும். தற்போதைய உள்ள சூழலில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. இதனடிப்படையில் பார்த்தால் ஒரே தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேருக்குநேர் மூன்று முறை மோதிக்கொள்ளும் அரிதான சம்பவம் நிகழலாம்.

இந்தத் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் முதல் போட்டி ஆகஸ்டு இருபத்தி எட்டாம் தேதி துபாய் மைதானத்தில் நடக்கிறது. அந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் இதே மைதானத்தில் தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி தருமா என்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் இடையே ஒரு புதிய எதிர்பார்ப்பு பெரிய அளவில் எழுந்துள்ளது. மேலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியோடுதான் முதல் போட்டியில் மோதுகிறது. இதனாலும் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆசிய கோப்பை போட்டி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் இந்திய அணிகள் மோதும் போட்டியில் யார் வெல்வார்கள் கோப்பையை யார் வெல்வார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் வீரரான ஷேன் வாட்சன் தனது கணிப்பை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது பற்றி அவர் கூறும் பொழுது ” இந்திய அணியின் நம்பிக்கை உயரத்தில் தான் இருக்கும். ஆக அவர்களின் பேட்டிங் வலிமை பெரியது. ஆனால் கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதன் மூலம் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை பெற்று இருக்கிறது. இந்த மனநிலையில் இருக்கும் பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியம்” என்று தெரிவித்தார்…

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” வெற்றி பெறும் அணி என்று எனது கணிப்பில் இருக்கும் அணி இந்திய அணி தான். நிலைமைகள் எப்படி இருக்கிறதோ அதற்கு மிகச் சிறப்பாக தகவமைத்துக் கொள்ளும் திறமை இந்திய அணியிடம் இருக்கிறது. இந்திய அணி ஆட்டத்தையும் ஆசிய கோப்பையை வெல்லும் என்ற எண்ணம் எனக்கு இப்போதுதான் வந்திருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் மிக வலிமையானது. நாட்டின் எல்லா இடத்திலும் அவர்கள் தீ போன்று இருக்கிறார்கள். அவர்களைக் கட்டுப்படுத்தி வெல்வது கடினம்” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -