இந்த இந்திய வீரர்கள் உலகக் கோப்பையை வெல்ல மாட்டார்கள் – பாகிஸ்தான் வீரர் பரபரப்பு கருத்து!

0
183
ICT

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இந்திய மண்ணில் ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடக்க இருக்கிறது. கடந்த முறை இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பொழுது, மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி அந்தத் தொடரை வென்று உலகக்கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது!

தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணி தயாரிப்பில் இரண்டு மோசமான பின்னடைவுகள் உருவாகி இருக்கிறது. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ள இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை இந்திய அணி இழந்து இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணிக்கு 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்த நான்காம் வரிசை பேட்ஸ்மேன் பிரச்சனை அதற்கு பிறகு ஸ்ரேயாசைக் கொண்டு தீர்க்கப்பட்டது. இந்த நிலையில் உலகக் கோப்பை வேகமாக நெருங்கி வருகையில், இவரும் முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தின் காரணமாக அறுவை சிகிச்சை செய்து விளையாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.

இதையெல்லாம் தாண்டி தற்போதுள்ள இந்திய அணியின் பந்து வீச்சு வரிசை என்பது நிலையான செயல்பாட்டை கொண்டு இருப்பதாக இல்லை. முக்கியமான போட்டிகளில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடையக்கூடிய ஆட்டங்கள் அமைகின்றன. எதிரணியைச் சராசரியாக அச்சுறுத்தக் கூடிய பந்துவீச்சு வரிசை இந்திய அணியிடம் தற்போது இல்லை என்றே கூறலாம்.

இந்த நிலையில் உலகக் கோப்பை நெருங்கி வரும்வேளையில் இந்திய பந்துவீச்சு வரிசை குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா சில பரபரப்பான முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
” இந்தியாவுக்கு தற்போது இருப்பது ஒரு தோல்வி அடைந்த பந்து வீச்சு வரிசையாகும். இவர்களுக்கு உலகக்கோப்பைக்கு ஒரு சிறந்த பந்துவீச்சு வரிசை தேவை. தற்போது உள்ளவர்களால் இந்திய அணிக்காக ஒரு உலகக் கோப்பையை வென்று தர முடியாது. இதற்காக நான் வருத்தம் அடையவே செய்கிறேன் ஆனால் இது அவர்களின் சிறந்த பந்துவீச்சு தாக்குதலாக இருக்காது. ஏனென்றால் ஜஸ்ட்ப்ரீத் பும்ரா கிடைப்பாரா என்ற எந்த தெளிவும் கிடையாது. இந்திய அணி நிர்வாகம் உம்ரான் மாலிக், நடராஜன் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கு சில வாய்ப்புகளை வழங்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இந்தியா பேட்டர்கள் சுழற் பந்துவீச்சில் சிறந்தவர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்திய பேட்டர்கள் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், சாகல் ஆகியோரை வலைகளில் எதிர்கொள்கிறார்கள். இவர்கள் பந்துகளை கொஞ்சம் வேகமாக வீசக்கூடியவர்கள். இவர்கள் பந்தை பெரிதாக திருப்ப மாட்டார்கள். ஆஸ்திரேலியா சுழற் பந்துவீச்சாளர்கள் பந்தை நன்றாகத் திருப்பினார்கள். இதனால்தான் இந்திய பேட்டர்கள் அவர்களை எதிர்த்து விளையாட கடினப்பட்டார்கள்!” என்று தெரிவித்துள்ளார்!