இந்த இரு இந்திய வீரர்கள் எதிர்காலத்தில் சிறந்த நடுவர்களாக ஆகலாம் – அம்பயர் சைமன் தௌஃபெல்

0
295

கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் நடுவர் பணி அவ்வளவு சுலபமான பணி கிடையாது. தற்பொழுது டிஆர்எஸ் விதிமுறை பயன்படுத்தி வந்தாலும் அவ்வளவு ஈஸியாக யாரும் நடுவர் வேலை செய்ய முடியாது என்பதுதான் உண்மை. 2004 முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் ஐசிசி சிறந்த நடிகர் விருதை சைமன் தௌஃபெல் வென்றிருக்கிறார். அவர் தற்பொழுது 3 இந்திய வீரர்களை குறிப்பிட்டு இவர்கள் நடுவர் பணிக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்று மனம் திறந்திருக்கிறார்.

நடுவர் பணி அவ்வளவு சுலபமான பணி கிடையாது

- Advertisement -

சைமன் தௌஃபெல் துபாயில் உள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடமியுடன் இணைந்து ஆன்லைன் நடுவர் படிப்பைத் தொடங்கியுள்ளார். பாடநெறி மூன்று நிலை அங்கீகாரத்தை வழங்குகிறது: அறிமுகம், நிலை 1 மற்றும் நிலை 2 இதுபோல நிலைகள் உள்ளன.

இந்த வகுப்பு ஆரம்பிக்கப்பட்ட நோக்கமே யார் வேண்டுமானாலும் நடுவர் பணிக்கு வரலாம் என்பதற்காக தான். ஆனால் அதற்கு முறையான பயிற்சி மற்றும் அனுபவம் தேவை. அந்த பயிற்சி மற்றும் அனுபவத்தை அதிகரித்துக் கொள்ளவே இந்த பாடநெறி கொண்டு வந்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் அவ்வளவு எளிதில் யார் வேண்டுமானாலும் நடுவர் ஆகிவிட முடியாது. ஒரு சிலர் இது போர் அடிக்கக்கூடிய பணி என்றும் இதில் அவ்வளவு வெகுமதிகள் கிடைப்பதில்லை என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வறண்ட சூழ்நிலையில் நாம் நடுவர் பணி செய்யும் போது மட்டுமே அவ்வாறு போர் அடிக்க வாய்ப்பு உண்டு. மற்றபடி இந்த பணியில் நிறைய வெகுமதிகள் நமக்கு கிடைக்கும் அது நிறைய பேருக்குப் புரிவதில்லை.

- Advertisement -

நிறைய வெகுமதி கிடைக்கும் அதே சமயத்தில் இந்த பணிக்கு வர வேண்டும் என்கிற ஆர்வத்தில் யார் வேண்டுமானாலும் வந்து விட முடியாது. அடிப்படையில் நடுவர் பணிக்கு வர வேண்டியவர்கள் அதற்கு ஏற்றவாறு முழுமையாக தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த இந்திய வீரர்கள் நடுவர் பணிக்கு வரலாம்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் முன்னாள் வீரர் சேவாக் மற்றும் இந்திய அணியின் ஸ்டார் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் நடுவர் பணிக்கு வரலாம் அவர்கள் இதில் சிறப்பாக வருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சேவாக் ஸ்கொயர் லெக் திசையில் என்னுடன் நெருங்கி ஒருசில முடிவுகளை அவர் கூறியிருக்கிறார். நான் கூறுவதற்கு முன்பே இது அவுட் இது நாட் அவுட் என்று ஒரு சில நேரத்தில் துல்லியமாக முடிவுகளை என்னிடம் கூறுவார். இது சம்பந்தமாக நான் அவரிடம் கேட்டபோது அவருக்கு இந்தப் பணியில் வராத தனக்கு விருப்பம் இல்லை என்று சேவாக் தெரிவித்ததாகவும் சைமன் தற்பொழுது கூறியுள்ளார்.