“ஐபிஎல் ஏலத்துல இந்த 2 பேருக்கு போட்டி இருக்கும்.. ஆனா ஒரு ஆஸி பிளேயர்க்கு இருக்காது!” – அஷ்வின் கணிப்பு!

0
4251
Ipl2024

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு இறுதி டிசம்பரில் நடக்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் விடுவிக்கப்பட்ட வீரர்களை வெளியிட்டிருக்கின்றன.

இந்த வருடம் ஏலத்திற்கு ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரில் மிட்சல் ஆகியோரும், மேலும் தென் ஆப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்சியும் முக்கியமான வீரர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.

- Advertisement -

ஐபிஎல் மெகா ஏலம் அணிகளுக்கு எந்த அளவிற்கு முக்கியமானதோ அதே அளவிற்கு மினி ஏலமும் முக்கியமானது. இதன் மூலமாக மெகா ஏலத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளவும், அணிகளில் உள்ள ஓட்டைகளை அடைக்கவும் மினி ஏலம் பயன்படுகிறது.

மேலும் மினி ஏலத்தில் ஒரு வீரருக்கு என்ன தகுதியோ அதைவிட இரண்டு மடங்கு விலை கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் இங்கு பணத்திற்கு மரியாதை கிடையாது. குறிப்பிட்ட இடத்திற்கான வீரருக்கு மட்டுமே மரியாதை. மெகா ஏலத்தில் மட்டுமே பணம் முக்கியமானது.

அதனால் இந்த முறை சில வீரர்கள் மிக அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட்டும் ஒருவர். மேலும் இந்த முறை ஏலத்திற்கு ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்சல் ஸ்டார்க் இருவரும் வருகிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் இருவர் மட்டுமே இதில் புதியவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் இருவரையும் வாங்குவதற்கு நிறைய ஆர்வம் காட்டப்படும். இவர்கள் அதிக விலைக்கு போகலாம். மேலும் ஆஸ்திரேலியா வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் ஐபிஎல் தொடரிலிருந்து விலகலாம். அவர்களுக்கு ஆசஸ் மற்றும் டி20 உலகக் கோப்பை இருக்கிறது. அவர்கள் இப்படி பாதியில் செல்லும் வரலாறும் இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆல் ரவுண்டர் டிராவிஸ் ஹெட் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால் அவர் பெரிய விலைக்குப் போவார் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை அவர் பெரிய விலைக்குப் போனால் அது ஆச்சரியப்பட வேண்டியது.

தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்சே நீல நிற பனியனில் தங்க நிற எழுத்துகளில் வான்கடே மைதானத்தில் மும்பை அணிக்காக விளையாடக்கூடிய வீரர் மாதிரி தெரிகிறார். என் பார்வையில் மிட்சல் ஸ்டார்க்கை விட இவரையே மும்பை அதிகம் விரும்பும் என்று நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!