“உலக கோப்பை பைனல்ல விளையாட போறது இந்த 2 டீம்தான்.. 3வதா ஒரு டீம் பயமுறுத்தும்!” – ஜாக் காலிஸ் ஆச்சரியமான கணிப்பு!

0
8851
Kallis

தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிகவும் விறுவிறுப்பான கட்டத்திற்கு வந்திருக்கிறது.

உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் இந்திய அணி ஆறு போட்டிகளில் ஆறு போட்டிகளையும் வென்று 12 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறது. மேலும் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது என்றும் கூறலாம்.

- Advertisement -

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு 6 போட்டிகளில் ஐந்து போட்டிகளை வென்று, 10 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மூன்று மற்றும் நான்காம் இடங்களில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இருக்கிறது. நியூசிலாந்து நான்கு ஆட்டங்களை தொடர்ச்சியாக வேண்டும் கடைசி இரண்டு ஆட்டங்களை இழந்தது. ஆஸ்திரேலியா முதல் இரண்டு ஆட்டங்களை தோற்று கடைசி நான்கு ஆட்டங்களை வென்றிருக்கிறது.

- Advertisement -

ஐந்தாவது இடத்தில் ஏழு போட்டிகளில் மூன்று வெற்றி ஆறு புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் இருக்கிறது. இன்று நடைபெறும் நியூசிலாந்து தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து தோற்றால், பாகிஸ்தான் அணிக்கு ஒரு அரைஇறுதி வாய்ப்பு உருவாகும்.

புள்ளி பட்டியலில் இவ்வாறாக நிலைமைகள் நீடித்துக் கொண்டிருக்க, யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சிகரமாக நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. மேலும் இந்த உலகக் கோப்பை தொடரை சுவாரசியப்படுத்தியது ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள்தான்.

இந்த நிலையில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் எந்த இரண்டு அணிகள் உலகக் கோப்பையின் இறுதி போட்டிக்கு செல்லும் என்பது குறித்து, தென் ஆப்பிரிக்கா லெஜன்ட் ஜாக் காலிஸ் தன்னுடைய கணிப்பை தற்பொழுது வெளியிட்டு இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது “இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி மோதும் என்று நான் நினைக்கிறேன். கோப்பையை வெல்வதற்கு ஃபேவரைட்டான அணியாக இந்தியா இருந்த போதும், தொடர்ச்சியாக முன்னேறி செல்லும் போது, உள்நாட்டில் சொந்த ரசிகர்களிடையே விளையாடுவதும் ஒரு அழுத்தமாக மாறும்.

உண்மையில் இந்தியா மிக அருமையாக விளையாடி வருகிறது. ஆனால் அவர்கள் நாக் அவுட் சுற்றுக்குள் நுழையும் பொழுது அது அவர்களுக்கு வேறு ஒன்றாக இருக்கும். மேலும் இந்த இரண்டு அணிகளுக்கும் அச்சுறுத்தல் தரக்கூடிய அணியாக ஆஸ்திரேலிய இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -