“இந்தியாவுக்கு இந்த 2 மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் தான் உலக கோப்பையை வாங்கி தரப் போறாங்க” – கிரிஸ் கெயில் அதிரடி

0
7586

2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை காண அட்டவணை இந்த வார துவக்கத்தில் மும்பையில் வைத்து வெளியிடப்பட்டது.

13 வது ஐம்பது ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கின்றன . அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தூங்கும் இந்த போட்டிகள் நவம்பர் மாதம் 19ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. மொத்தம் 46 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை போட்டி தொடரில் 48 ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன .

- Advertisement -

இந்த உலகக்கோப்பை எண் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி கடந்த உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணியுடன் விளையாட இருக்கிறது. இந்திய அணி அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் வைத்து தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள உள்ளது . அதனைத் தொடர்ந்து பதினொன்றாம் தேதி டெல்லியில் நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாட இருக்கிறது . மேலும் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் மாதம் 15ஆம் தேதி அகமதாபாத்தில் வைத்து நடைபெற இருக்கிறது .

உலகக் கோப்பை போட்டிகள் துவங்குவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்ற நிலையில் தற்போதைய முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை காண தங்களது கணிப்புகளை தெரிவிக்க துவங்கி விட்டனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் உன்னால் கேப்டனுமான கிரிஸ் கெயில் 2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பையை பற்றிய தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பையை யார் வெல்வார் என்று என்னால் உறுதியாக கூற முடியாது ஆனால் அரை இறுதிப் போட்டிக்கு இந்தியா பாகிஸ்தான் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெறும் என தெரிவித்திருக்கிறார். நியூசிலாந்து அணிக்கும் வாய்ப்பு இருக்கிறது ஆனாலும் நான் ஆஸ்திரேலியா அணியை நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பையில் இந்திய அணிக்கு நட்சத்திர வீரராக இருக்கக்கூடிய வீரர்கள் யார் என்று கேள்விக்கு பதில் அளித்த கெயில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவ் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஆக இருப்பார்கள் என்று தெரிவித்தார். தன்னுடைய பங்களிப்பின் மூலம் ஆட்டத்தையே மாற்றக்கூடிய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா மேலும் சூரியகுமார் யாதவும் தன்னுடைய பேட்டிங்கின் மூலம் ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் மாற்றக்கூடியவர்கள் இவர்கள் இருவரும் தான் இந்தியாவின் கீப்ளையர்கள் என தெரிவித்திருக்கிறார் கெயில் .

ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஒரு வருடமாக இந்திய அணிக்கு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. காயத்திலிருந்து குணமடைந்து தற்போது பயிற்சியில் மேற்கொண்டு வருகிறார் மேலும் அவர் உலகக் கோப்பையில் பங்கேற்பார் என்பதே சந்தேகமாக இருக்கிறது. அதுபோல சூரியகுமார் யாதவின். ஒரு நாள் போட்டியின் ஃபார்ம் மோசமாக உள்ளது . கடந்த ஆஸ்திரேலியா தொடரில் அனைத்து போட்டிகளிலும் சொற்பரன்களில் ஆட்டம் இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் இவர்கள் இருவர் தான் இந்தியாவின் முக்கிய வீரர்கள் என்று கிறிஸ் கெயில் கூறியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது .