சூர்யா விளையாடும் பொழுது அங்க நம்மால எதுவுமே செய்ய முடியாது- பாப் டு பிளிசிஸ் விரக்தி!

0
15932
Faf

இன்று ஐபிஎல் தொடரில் பிளே ஆப்ஸ் வாய்ப்புக்கான மிக முக்கியமான போட்டியில் மும்பை மைதானத்தில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது!

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு கேப்டன் பாப் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இருவரும் முறையே 65, 68 ரன்கள் எடுத்து, அணி 199 ரன்கள் குவிக்க காரணமாக இருந்தார்கள்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய மும்பை அணிக்கு சூரியகுமார் யாதவ் மற்றும் நெகில் வதேரா இருவரும் 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இருவரும் முறையே 83, 52 ரன்கள் எடுத்து, பதினாறு புள்ளி மூன்று ஓவர்களில் இலக்கை எட்டி மும்பை வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்கள்.

இன்றைய போட்டியில் கேப்டன் பாப் மற்றும் மேக்ஸ்வெல் கொடுத்த துவக்கத்தை கீழ் வரிசையில் வந்த பெங்களூர் அணியின் பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இல்லையென்றால் இன்னும் ஒரு 20 ரன்கள் சேர்த்து கிடைத்திருக்கும்.

தோல்விக்கு பின் பேசிய கேப்டன் பாப் டு பிளிசிஸ் ” நாங்கள் ஒரு இருபது ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். இந்த ஆடுகளம் மற்றும் மும்பை பேட்டிங் பலம் ஆகியவற்றுக்கு 220 ரன்கள் சரியாக இருந்திருக்கும். அவர்கள் ஆழமாக பேட்டிங் செய்கிறார்கள்.

- Advertisement -

கடைசி ஐந்து ஓவர்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. இந்த ஆடுகளம் வழக்கமான வான்கடே ஆடுகளத்தை விட வேகம் குறைவாக இருந்தது.

சூரியகுமார் அன்றைய நாளில் சிறப்பாக இருக்கும் பொழுது அவருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினம். பல பந்துவீச்சு விருப்பங்களை அவருக்கு எதிராக பயன்படுத்தவே முடியாது.

சிராஜ் இந்த தொடரில் மிகவும் அருமையாக இருந்திருக்கிறார். டி20 கிரிக்கெட்டின் இயல்பில் பந்துவீச்சாளர்கள் எப்பொழுதும் அழுத்தத்தில்தான் இருப்பார்கள்!” என்று கூறியிருக்கிறார்!