அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20யில் புதிதாக 2 வீரர்கள் அறிமுகப் விளையாட உள்ளார்கள் – கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓப்பன் டாக்

0
448
Hardik Pandya

இந்திய அணி இன்னும் சில காலத்தில் உலகின் இரு மூலையில் ஒரே நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் சூழல் வருவது உறுதி. அந்தளவிற்குத் திறமையான வீரர்களின் வருகை இந்திய கிரிக்கெட்டில் அதிகரித்திருக்கிறது. இதை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷாவும் கூறியிருக்கிறார்!

தற்போது இந்தியாவின் ஒரு அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடுகிறது. இதற்கான நான்கு நாள் பயிற்சி போட்டியில் நேற்று முன்தினம் முதற்கொண்டு லீசெஸ்டர்சையர் அணியோடு விளையாடி வருகிறது. இந்த அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் உள்ளனர். இந்த ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை 1 முதல் 5 வரை நடக்கிறது!

- Advertisement -

இதற்கு நடுவில் இன்னொரு இந்திய அணி இங்கிலாந்திற்கு அருகிலுள்ள அயர்லாந்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளையும், இரண்டாவது போட்டி நாளை மறுநாளும் நடக்க இருக்கிறது. இந்த அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா இருக்கிறார். மேலும் இதுவரையில் இந்திய அணிக்காக விளையாடியிராத அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ராகுல் திரிபாதி ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெற்று இருக்கிறார்கள்.

ஐ.பி.எல் தொடர் முடிந்து இந்தியாவில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் டி20 தொடரில், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகிய இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இவர்கள் இருவருக்கும் ஒரு ஆட்டத்திலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது இவர்களோடு சேர்த்து ராகுல் திரிபாதியும் அயர்லாந்து தொடரில் முதன் முதலாக இடம்பெற்று இருக்கிறார். இதனால் இந்தத் தொடரிலாவது இவர்களில் யாருக்காவது இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் இரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அயர்லாந்து டி20 தொடருக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்ட்யா சூசகமான சில தகவல்களைக் கூறியுள்ளார். அதில் அவர் “நாங்கள் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவே விரும்புகிறோம். அதே நேரத்தில் சிறந்த அணியோடும் விளையாட விரும்புகிறோம். இரண்டு வீரர்கள் அறிமுகமாவதிற்கு வாய்ப்புள்ள சூழல்தான் நிலவுகிறது. ஆனால் எல்லாவற்றிக்கும் மேலாக எங்களிடம் உள்ள சிறந்த அணியை உறுதிசெய்வதும் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய ஹர்திக் பாண்ட்யா “நான் எதையும் காட்ட இங்கு வரவில்லை. இந்திய அணியை வழிநடத்தும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய விசயம். நான் யாருக்கும் எதையும் காட்டுவதற்காக இந்த விளையாட்டை விளையாடவில்லை. நான் இப்போது நன்றாக இருக்கிறேன். நான் என் எதிர்காலத்தைப் பார்க்கிறேன், மேலும் இந்தத் தொடரில் நான் என்ன கொண்டுவர முடியும் என்பதில்தான் என் முழுக்கவனமும் உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்!