“விக்கெட்ல ஒன்னுமே இல்ல.. அதனால இதை செய்தேன்.. சிராஜ் கூட இருக்கிறது..!” – முகமது ஷமி பேச்சு!

0
3023
Shami

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் முதல் போட்டியில் தற்பொழுது விளையாடுகிறது.

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. வழக்கமாக மொகாலி ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் வசதியான ஒன்று. மேலும் இங்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணியின் வரலாறு நல்லபடியாக இல்லை.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை முகமது சமி முதல் ஓவரிலேயே வீழ்த்தினார். ஆனால் சர்துல் தாக்கூர் வீசிய ஓவரில் டேவிட் வார்னர் கொடுத்த எளிய கேட்சை ஸ்ரேயாஸ் ஐயர் தவறவிட்டார்.

இதன் காரணமாக டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் சேர்ந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலிய அணியை வலுவான நிலைக்கு கொண்டு செல்ல ஆரம்பித்தார்கள்.

பிறகு பந்துவீச்சுக்கு வந்த டேவிட் வார்னரை ரவீந்திர ஜடேஜா வெளியே அனுப்ப, முகமது சமி ஸ்மித்தை வெளியே அனுப்பி இந்திய அணிக்கு தேவையான திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார்.

- Advertisement -

இதன்பிறகு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் அதிரடியாக ரன்களுக்கு போக முடியவில்லை. மேலும் முகமது சமி சரியான நேரத்தில் விக்கெட் எடுத்து கொடுத்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணியால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ஓவர்களுக்கு 276 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

முகமது சமி 10 ஓவர்கள் பந்துவீசி 51 ரன்கள் விட்டுத் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அவருடைய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது ஐந்து விக்கெட் ஆகும். மேலும் அவருடைய சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாகவும் இது அமைந்தது.

பந்துவீச்சு முடிந்ததும் பேசிய முகமது சமி
” ரொம்ப சந்தோசமா இருக்கு. சிராஜ் கூட சேர்ந்து இருக்கும் நேரங்களை அனுபவிக்கிறேன். சரியான பகுதிகளில் பந்து வீசுவதும், முதலில் ஒரு தொனியை உருவாக்குவதும் முக்கியம்.

ஆமாம் இங்கு மிகவும் சூடாக இருக்கிறது. ஆனால் எங்களுடைய வீரர்கள் எல்லோரும் வெளியில் இருப்பவர்கள் ஏசி பாக்ஸில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். ( நகைச்சுவையாக )

விக்கெட்டில் பெரிதாக எதுவும் இல்லை. எனவே சரியான லைன் மற்றும் லென்த்தில் வீசுவதும், வேரியேஷன்களை கொண்டு வருவதும் முக்கியமானதாக இருந்தது. இப்படியான மாறுபாடுகளை எல்லாம் செய்து விக்கெட் பெறுவது எப்பொழுதும் மகிழ்ச்சியான ஒன்று. இது அணிக்கும் நமக்கும் நல்லது!” என்று கூறியிருக்கிறார்!