“ஆஸ்திரேலியா இங்கிலாந்து மாதிரி இந்தியா வொர்த்தான டீம் கிடையாது” – இந்திய முன்னாள் வீரர் ஓபன் ஸ்டேட்மெண்ட்!

0
733
ICT

இந்திய கிரிக்கெட் தன்னுடைய வளர்ச்சியின் அழுத்தமான புள்ளியை சவுரவ் கங்குலி கேப்டன்சியின் கீழ் பதித்தது. பல இளம் திறமைமிக்க புதிய வீரர்கள் இந்திய கிரிக்கெட்டுக்குள் வருவதற்கான கதவை சவுரவ் கங்குலி திறந்து வைத்தார். 2003 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கும் சென்றது!

சவுரவ் கங்குலி அமைத்த அந்த இந்திய கிரிகெட்டுக்கான வளர்ச்சி அடிப்படையில் இருந்து, மகேந்திர சிங் தோனி மேல் நோக்கி இந்திய கிரிக்கெட்டை கொண்டு சென்றார். அவரது தலைமையின் கீழும் சில திறமைமிக்க இளம் வீரர்கள் வந்தார்கள். மேலும் 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை இந்திய அணியின் வசம் வந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து கேப்டன் பொறுப்பு விராட் கோலியின் கைகளுக்குச் செல்ல, இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட் கொஞ்சம் தடுமாறினாலும் கூட, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியை மிகச் சிறப்பான உயரத்திற்கு கொண்டு சென்றார்.

இதற்கு அடுத்து சில பிரச்சனைகளால் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேற, அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவத்திற்கும் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவும், புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் வந்தார்கள்.

புதிய அணுகு முறையில், புதிய ஒரு அணியை உருவாக்கும் இவர்களது ஆரம்பகட்ட முயற்சிகள் எல்லாமே மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் இவர்களின் முயற்சிகளுக்கான பலன் என்கின்ற அளவில் பார்த்த பொழுது, அதனுடைய வெளிப்பாடு பெரிய அளவில் எதுவுமே இல்லாமல் இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடு ஒருபுறம் தேய, இன்னொரு புறம் இந்திய கிரிக்கெட் அணியின் அணுகுமுறையும் மனநிலையுமே மோசமாகத் தெரிகிறது.

- Advertisement -

தற்போது இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் “பணம் மற்றும் அதிகாரம் எங்களிடம் இருந்த பொழுதும், நாங்கள் சாம்பியன் ஆவதற்கான இடத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். நாங்கள் இப்பொழுதெல்லாம் சாதாரணமானதை கூட கொண்டாட பழகிவிட்டோம். ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக விளையாடுகிறது. ஆனால் இந்திய அணி விளையாட மட்டுமே செய்கிறது. அவர்களின் அணுகுமுறை மனநிலை எதுவுமே சரி இல்லை. இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்திய அணியின் செயல் திறன் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட் ஒருபுறம் இருக்க, மற்ற இரண்டு கிரிக்கெட் வடிவங்களிலும் இந்திய அணி மிகச் சாதாரணமாகச் சமீப காலத்தில் இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களை இழந்தது. டி20 உலக கோப்பையில் மிக மோசமாக செயல்பட்டது. நாங்கள் இங்கிலாந்து போல ஒரு உற்சாகமான அணியும் அல்ல; நாங்கள் ஆஸ்திரேலியா இருந்தது போல ஒரு மிருகத்தனமான அணியும் அல்ல; நாங்கள் ஒரு சாதாரண அணியாக இருக்கிறோம்!” என்று கூறி இருக்கிறார்!