“அப்படியெல்லாம் கிடையவே கிடையாது.. அப்படி சொல்லாதிங்க..!” – இங்கிலாந்து ஆதில் ரஷீத் கோபம்!

0
561
Rashid

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது பலரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

அதே சமயத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோற்று இருந்த இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் போன்ற சிறிய அணியிடம் தோற்றது உலகக் கோப்பை அரையிறுதிக்கான வாய்ப்புகளை மேலும் சில அணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

- Advertisement -

மேற்கொண்டு பெரிய அணிகளிடம் தோல்வியை சந்திக்கும் பொழுது உலகக் கோப்பை அரை இறுதி வாய்ப்பிலிருந்து அதிர்ச்சி அளிக்கும் விதமாக இங்கிலாந்து வெளியே செல்வதற்கும் வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கிறது.

தற்போது இங்கிலாந்து அணிக்கு நல்ல பவுலிங் யூனிட் இல்லை. ஒருநாள் கிரிக்கெட்டுக்கு உலகக்கோப்பை தொடர் எனும் பொழுது வலிமையான பௌலிங் யூனிட் தேவை. ஆனால் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்களை வைத்து சமாளிப்பதால், அது அவர்களுக்கு பிரச்சனையாக மாறுகிறது.

மேலும் இந்திய சூழ்நிலையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் ஆடுகளத்தை கணித்து அதற்கு ஏற்றவாறு விளையாடுவது சிரமமாக இருக்கிறது. அவர்கள் தட்டையான ஆடுகளத்தில் அதிரடியாக விளையாடி பழகியது பின்னடைவாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் அடுத்த கட்ட வாய்ப்புகள் பற்றி பேசிய அந்த அணியின் வீரர் ஆதில் ரஷீத் “தோல்வி விளையாட்டின் ஒரு பகுதியாகும். அது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. இது நாங்கள் தோற்ற ஒரே ஒரு போட்டி. எங்களுக்கு கடுமையான போட்டிகள் இருப்பதை அறிவோம். ஆனால் ஒரு யூனிட் முன்னேறி செல்வதால் நாங்கள் நன்றாக விளையாட முடியும் என்று நம்புகிறோம்.

எங்களுக்கு இன்னும் ஆறு ஆட்டங்கள் இருக்கிறது. நாங்கள் முன்னோக்கி செல்வோம் வெற்றிக்கான வேகத்தை பெறுவோம். அணி மீது நான் நம்பிக்கை உடன் இருக்கிறேன். நாங்கள் வலுவாக வருவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் பசியுடன் இருக்கும் மனநிலையை பெற்றுள்ளோம்!

கடந்த உலக கோப்பைக்கு பிறகு நாங்கள் ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவதற்கான ஆராவை இழந்து விட்டோம் என்பது கிடையவே கிடையாது. நாங்கள் அப்படி யாரும் நினைக்கவே இல்லை!” என்று கூறியிருக்கிறார்!