கோலி டிவில்லியர்ஸ் கிடையாது.. இவருக்குத்தான் யார்க்கர் போடவே முடியாது – லுங்கி நிகிடி கருத்து!

0
5069
Ngidi

புதிது புதிதான கிரிக்கெட் வடிவங்கள் வர வர, ஓவர்கள் குறைய ஆரம்பித்தது. இதனால் போட்டியின் சவால்களும் குறைந்தது. எனவே வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட திறமைகள் மட்டுமே தேவைக்கு இருந்தால் போதும் என்கின்ற நிலை உருவானது!

டி20 கிரிக்கெட்டின் வருகையின் போது, இனி சுழற் பந்துவீச்சாளர்களே இருக்க முடியாது என்று பேசப்பட்டது. ஆனால் இன்று டி20 கிரிக்கெட்டில் சுழற் பந்துவீச்சாளர்கள்தான் மிகவும் வெற்றிகரமானவர்களாகவும், மத்திம ஓவர்களில் ரன் கட்டுப்படுத்தும் பெரும் பொறுப்பை கொண்டிருப்பவர்கள் ஆகவும் இருக்கிறார்கள்.

- Advertisement -

டி20 கிரிக்கெட் வந்த பிறகு வேகப்பந்து வீச்சில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் குறைந்தபட்சம் மூன்று வகையான சிறப்பு பந்துகளை வீச வைத்திருக்க வேண்டும் என்கின்ற நிலை உருவானது. வழக்கமான முறையில் வேகப்பந்துவீச்சாளர் பந்து வீச முடியாது.

இந்த வகையில் ஒரு வேகப்பந்துவீச்சாளரிடம் வழக்கமான வேகம் மற்றும் லைன் அண்ட் லெந்த் இருக்க வேண்டும். அதே சமயத்தில் அவரது கோ த்ரோ பந்துகளாக பின் கை மூலம் வீசப்படும் மெதுவான பந்து, நக்குல் பந்து, மெதுவான பவுன்சர், யார்க்கர், வைட் யார்க்கர் என்று கைவசம் இருக்க வேண்டும்.

இப்படியான சிறப்பு பந்துவீச்சு வகைகள் வேகப்பந்துவீச்சாளரிடம் இல்லை என்றால், அந்த பந்துவீச்சாளரால் டி20 கிரிக்கெட்டில் நீடித்திருக்க முடியாது. யாரெல்லாம் அதிகப்படியான பந்துவீச்சு வகைகளை கைவசம் வைத்திருக்கிறார்களோ அவர்களே டி20 கிரிக்கெட் விளையாட முடியும் என்கின்ற நிலைதான் இருக்கிறது.

- Advertisement -

இந்த வகையில் டி20 கிரிக்கெட் அறிமுகத்திற்குப் பிறகு வேகபந்துவீச்சாளர்கள் யார்க்கர் வீசுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் வீச வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது. இதில் தேர்ந்த பந்துவீச்சாளர்கள் வெளிநாட்டு டி20 லீக்குகளில் நல்ல விலைக்குப் போகிறார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட ஆடுவதற்கு சிரமமான யார்க்கர் பந்துகளை கூட அதிக முறை வெற்றிகரமாக விளையாடிய வீரர் ஒருவர் இருக்கிறார். அப்படியான ஒரு வீரரைத்தான் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி “அவருக்கு எதிராக அடிப்பதற்கு சிரமமான யார்க்கர் பந்தை கூட வீசுவது கடினம்” என்று கூறியிருக்கிறார்.

அந்த வீரர் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனும், தற்போதைய ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனமான மகேந்திர சிங் தோனிதான். இப்படியான பந்துகளை அடிப்பதற்கு என்றே அவரது இளம் வயது நண்பரிடம் கற்று வந்து, அவர் ஹெலிகாப்டர் ஷாட்டை மிகவும் கூர்மைப்படுத்தி வைத்திருந்தார். இதன் காரணமாகவே அவருக்கு யார்க்கர் பந்துகள் வீசுவது கூட பந்துவீச்சாளர்களுக்கு கடினமான ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.