“கோலி பும்ரா கிடையாது.. இந்த 28 வயசு வீரர்தான் இந்தியாவுக்கு துருப்புச் சீட்டு!” – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் உறுதியான பேச்சு!

0
9670
Virat

இந்திய அணி ஆசிய கோப்பைக்கு முன்பாக பெங்களூரில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருக்கும் பொழுது, இந்திய ரசிகர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு, இந்தியா உலகக் கோப்பையில் நிச்சயம் சவால் அளிக்கக்கூடிய அணி என்பதான நம்பிக்கை கிடையாது.

அதேநேரம் ஆசியக் கோப்பைக்கு கிளம்பிச் சென்று இந்திய அணி விளையாடிய ஒவ்வொரு போட்டிகளிலும் இந்த நம்பிக்கை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிகரித்து வந்தது. இறுதியாக ஆசியக் கோப்பையை இந்திய அணி வெல்ல, இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என்கின்ற நம்பிக்கை உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுத் துறையை எடுத்துக் கொண்டால், இந்த இரண்டு துறைகளிலும் வாய்ப்பு பெற்ற அனைத்து வீரர்களும் தங்களுடைய வேலைகளில் மிகச் சிறப்பான வெளிப்பாட்டை காட்டி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தற்போது உலக கோப்பையில் இந்திய அணிக்கு பெரிய கவலை அளிக்கக்கூடிய விஷயமாக எதுவுமே இதுவரையில் இல்லை. இந்திய அணிக்கு இருக்கின்ற தலைவலி எல்லாம் எல்லோரும் நன்றாக விளையாடுவதால் யாருக்கு வாய்ப்பு தரலாம்? என்பது பற்றிதான் இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணி குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இண்டிகாப் ஆலம்
“ஆசியக் கோப்பையில் இந்தியா விளையாடிய விதம் மற்றும் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடிய விதம், அவர்கள் யாரையும் தோற்கடிக்கும் அணியாக தெரிகிறார்கள். அவர்களுடைய சுழல் தாக்குதல் தனித்து நிற்கிறது. குல்தீப் யாதவ் போட்டிகளில் முக்கிய பங்கு வகிக்க போகிறார். அவர் அனைத்து அணிகளின் பேட்ஸ்மேன்களையும் கடுமையாக சோதிப்பார்.

- Advertisement -

ஜடேஜா மற்றும் குல்தீப் ஒரு கொடிய கலவையை உருவாக்குகிறார்கள். குல்தீப் யாதவ் ஒரு மேட்ச் வின்னர். அவர் இந்த உலக கோப்பையில் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் என்பது என்னுடைய கருத்து. இப்போது உங்களுக்கு ரவிச்சந்திரன் அஸ்வினும் சேர்த்து கிடைத்திருக்கிறார்.

பாகிஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால் பவுலிங் துறையில் மிடில் ஓவர்களில் மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஆசிய கோப்பையில் நாங்கள் போராடினோம். இந்தக் கட்டத்தில் சிறப்பாக செயல்படுவது அவசியம். இல்லையென்றால் எந்த அணியும் பாகிஸ்தானுக்கு எதிராக 300 ரன்கள் மிக எளிதாக எடுக்கும். நசீம் ஷா நல்ல இளம் திறமை. தற்பொழுது அவர் கிடைக்காததால் புதிய பந்தில் அவரை தவற விடுவது பெரிய பின்னடைவு!” என்று கூறியிருக்கிறார்!