“அப்ப எங்ககூட ஆடமாட்டேனு சொன்னிங்க.. இப்ப என்ன சொல்லுவிங்க?” – ஆஸியை வம்புக்கு இழுத்த நவீன் உல் ஹக்

0
608
Naveen

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி வென்ற காரணத்தினால், அரை இறுதிக்கான கதவுகள் பல அணிகளுக்கும் திறந்து இருக்கிறது.

தற்பொழுது நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் எட்டு போட்டிகளில் விளையாடி தலா நான்கு போட்டிகளை வென்று 8 புள்ளிகள் உடன் இருக்கின்றன.

- Advertisement -

அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஏழு போட்டிகளில் ஆறு வெற்றிகள் உடன் வலிமையாக இருக்கிறது. இந்திய அணி 7 போட்டிகளில் 7 போட்டிகளையும் வென்று மிக வலிமையாக இருக்கிறது.

தற்பொழுது ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் வரும் என்றாலும் கூட, அந்த அணி தன்னுடைய கடைசி இரண்டு போட்டிகளில் ஒன்றையாவது வெல்ல வேண்டும்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 7 போட்டிகளில் நான்கு போட்டிகளை வென்று எட்டு புள்ளிகளுடன் இருக்கிறது. மேலும் தன்னுடைய கடைசி இரண்டு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை எதிர்கொள்கிறது. நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் கடைசி ஆட்டங்களை தோற்று, ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி இரண்டு ஆட்டத்தில் ஒரு ஆட்டத்தை வென்றால் கூட அரையிறுதிக்கு வர முடியும்.

- Advertisement -

இப்படி உலகக் கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கும் பொழுது, கடந்த ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தை எடுத்து வைத்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் இடம் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் கேள்வி கேட்டிருக்கிறார்.

அதாவது கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு எதிராக அந்நாட்டின் அரசு செயல்படுவதாக கூறி, மனித உரிமைகளுக்காக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தங்களது நாட்டில் நடக்க இருந்த கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நவீன் உல் ஹக் “அப்போது மனித உரிமைகளை காரணம் காட்டி எங்களுடன் விளையாட முடியாது என்று சொன்னிர்கள். தற்பொழுது உலகக் கோப்பையில் அடுத்து எங்களுடன் என்ன செய்யப் போகிறிர்கள்? மனித உரிமையா இல்லை இரண்டு புள்ளிகளா? ” என்று காட்டமாகவே கேட்டு இருக்கிறார்!