அன்று பாகிஸ்தான் இன்று இங்கிலாந்து.. 17 வருடம் பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் நடந்த சம்பவம்

0
275
Jaiswal

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வலிமையான துவக்க ஆட்டக்காரர் இல்லாமல் நீண்ட நாட்களாக இந்திய அணி நிர்வாகம் கஷ்டப்பட்டு வந்தது.

தற்பொழுது இந்த இடத்திற்கு 22 வயதான இளம் இடது கை துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த வருடம் அறிமுகமான டெஸ்ட் போட்டியில் 171 ரன்கள் குவித்து தன்னுடைய வருகையை அழுத்தமாக அறிவித்தார்.

இவருக்கு முன்பாக எடுத்துக் கொண்டால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் துவக்க ஆட்டக்காரராக சிகர் தவான் 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அறிமுகமானார்.

இதற்குப் பிறகு அடுத்த ஐந்து வருடங்களில் 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடியதோடு இவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதில் ஆச்சரியமான விஷயம் அப்பொழுது அவரது டெஸ்ட் கிரிக்கெட் சராசரி 40 இருந்தது.

- Advertisement -

மேலும் இடதுகை பேட்ஸ்மேன்கள் இந்திய டெஸ்ட் அணிக்காக ஒரு இரட்டை சதம் அடித்து 17 வருடங்கள் ஆகிறது. 17 வருடங்களுக்கு முன்னால் 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சவுரவ் கங்குலி 239 ரன்கள் அடித்திருந்தார்.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 626 எடுக்க, பாகிஸ்தான் அணி 537 ரன்கள் எடுத்தது. பிறகு இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்த பொழுது ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்தப் போட்டிக்கு பிறகு சரியாக 17 வருடங்கள் கழித்து இந்தியா அணிக்காக ஒரு இடது கை பேட்ஸ்மேன் இரட்டை சதம் அடித்தது ஜெய்ஸ்வால் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்த இரட்டை சதம் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வெறும் 17 ரன்.. ஜெய்ஸ்வாலின் மாஸ்டர் பிளான்.. அசந்து போகும் கிரிக்கெட் வல்லுனர்கள்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் நீண்ட காலம் இடம்பெறக்கூடிய இடதுகை வீரராக ஜெயஸ்வால் இருந்தால், பல வகைகளில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டுக்கு அது நன்மையை தரும்!