உலக கிரிக்கெட்

ரோச் ரிட்டன்.. ஆர்சிபி வீரருக்கு டாட்டா.. வெஸ்ட் இண்டீஸ் அறிவித்த மாஸ் அணி.. தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்

தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மட்டும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளத. இதன் டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகத் தரப்பிலிருந்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான கெமார் ரோச் அணிக்கு திரும்பும் நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆர்சிபி வீரருக்கு இடம் அளிக்கப்படவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கூட டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்துள்ள நிலையில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப அனுபவமும் இளமையும் கலந்த புதிய வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், ஆகஸ்ட் 15ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. இதற்குப் பிறகு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.

இதற்கு முன்னர் 31ம் தேதி தொடங்கிய வார்ம் அப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஏழாம் தேதி நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் பலமான வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது. இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான கெமார் ரோச் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய நிலையில் காயம் குணமாகி தற்போது மீண்டும் அணியில் இணைந்திருக்கிறார்.

- Advertisement -

இது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பந்துவீச்சை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சமீபகாலமாக அணியில் ஓய்வின்றி விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் துணை கேப்டன் அல்சாரி ஜோசப்க்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவரது பணிச்சுமையை கணிசமாக குறைக்கும் நோக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. அல்சாரி ஜோசப் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க தொடருக்கு அனுபவமும் இளமையும் கலந்த சரிசமமான அணியை தேர்வு செய்துள்ளதாகவும், முந்தைய தோல்விகளில் இருந்து மீண்டு வர இந்த அணி பெரிதும் கைகொடுக்கும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரே கோலி நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடருக்கு கிரேக் பிராத்வைட் கேப்டன் ஆகவும், துணை கேப்டனாக ஜோசுவா டா சில்வா ஆகியோரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க:அர்ஷ்தீப் என்ன ஷாட் இது.. கம்பீர் கண்டிப்பா அத பண்ண போறது இல்லை.. முன்னாள் இந்திய வீரர் விமர்சனம்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி :கிரேக் பிராத்வைட் (கேட்ச்), ஜோசுவா டா சில்வா (விசி), அலிக் அதானாஸ், டெவின் இம்லாச், மைக்கேல் லூயிஸ், கீசி கார்டி, ஜஸ்டின் க்ரீவ்ஸ், கவேம் ஹாட்ஜ், ஜேசன் ஹோல்டர், ஷமர் ஜோசப், குடகேஷ் மோட்டி, கேமர் ரோச், ஜெய்டன் சீல்ஸ், ஜோமல் வாரிகன், பிரியான் வாரிக்கன், சார்லஸ்.

- Advertisement -
Published by