இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டிய நிலைமையில் கடைசி கட்ட பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.
இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் குறித்து முன்னாள் வீரர் தோட்டா கணேஷ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு களம் இறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த போதிலும் முன்னணி பேட்ஸ்மேன்கள் கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச் செல்லாமல் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்து வந்தனர். ஒரு கட்டத்தில் 197 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்த நிலையில், ஆல் ரவுண்டர் சிவம் தூபே களத்தில் நின்று கொண்டிருந்தார்.
197 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த இந்திய அணி 226 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகள் இழந்திருந்த போது கடைசி மூன்று ஓவர்களில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் நின்று கொண்டிருந்த சிவம் தூபே அசலங்காவின் ஓவரில் பௌண்டரி அடித்து போட்டியை டிரா செய்தார். அதற்குப் பிறகு இரண்டு விக்கெட்டுகள் கையில் இருக்க வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், சிவம் தூபே எல்பிடபிள்யூ முறையில் வெளியேற, கடைசி விக்கெட்டாக அர்ஸ்தீப் சிங் உள்ளே வந்தார்.
அவருக்கு தகுந்தவாறு இலங்கை கேப்டன் அசலங்கா அனைத்து ஃபீல்டர்களையும் ஒரு ரன் எடுக்க விடாமல் வட்டத்திற்குள் கொண்டு வர, அர்ஸ்தீப் சிங் தூக்கி அடிக்க நினைத்து அவர் பந்திலேயே எல்பி டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய அணி வெற்றி பெறாமல் டிராவில் முடித்தது. இது குறித்து இந்திய முன்னாள் வீரர் தோட்டா கணேஷ் டெயில் எண்டர்கள் வெற்றி பெற வைக்க முடியாவிட்டாலும் விளையாட்டு விழிப்புணர்வு தேவை என்று கூறுகிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “கடைசி கட்டத்தில் இறங்கும் டெயில் எண்டர்களிடம் இருந்து ரன்கள் எதிர் பார்க்க முடியாது. ஆனால் எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் விளையாட்டு விழிப்புணர்வு என்பது முக்கியமான ஒன்று. அர்ஸ்தீப் சிங் அடித்த அந்த ஷாட் பயிற்சியாளர் கம்பீரை நிச்சயமாக ஈர்க்கப் போவதில்லை. போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. இலங்கை பந்துவீச்சாளர்களிடமிருந்து சிறப்பான செயல்பாடு வெளிப்பட்டது.
இதையும் படிங்க:டை ஆன இந்தியா இலங்கை போட்டி.. சூப்பர் ஓவர் ஏன் தரவில்லை.. கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?
இது தோல்விப் பாதையில் இருந்த இலங்கை அணிக்கு நல்ல ஒரு ஊக்கமாக அமைந்திருக்கும்” என்று சமூக வலைதள பக்கத்தில் கூறி இருக்கிறார். இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இதேபோன்று டிராவில் முடிவடைந்து சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.