இந்தியா வெற்றியை துள்ளிகுதித்து கூச்சலிட்டு கொண்டாடிய துபாய் ஷேக்; இந்தியகாரனையே மிஞ்சிட்டியே ப்பா – கண்கலங்க வைக்கும் வீடியோ!

0
195

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை துபாய் ஷேக் ஒருவர் மைதானத்தில் துள்ளிக்குதித்து கொண்டாடிய வீடியோ இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்பிற்கு சற்றும் பஞ்சம் இருக்காது. 1980களில் இருந்து, இந்த விறுவிறுப்பு தற்போது வரை சற்றும் குறையவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு அரசியல் விவகாரங்களுக்காக இரு அணிகளுக்கும் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை.

- Advertisement -

ஐசிசி நடத்தும் தொடர்கள் மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மட்டுமே சராசரியாக எந்த இரு அணிகளும் மோதிக் கொள்கின்றன. இருப்பினும் அப்போதும் மைதானத்தில் இருதரப்பு ரசிகர்களின் கூட்டம் கலைகட்டும்.

கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி ஆசிய கோப்பை தொடரில் இந்த இரு அணிகளும் மீண்டும் மோதிக் கொண்டன. முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை ஆட்டம் பரபரப்பாக சென்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களுக்கு ஆல் அவுட் ஆனது. இறுதியில் 147 ரன்கள் அடித்திருந்தது. பந்துவீச்சில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அடுத்ததாக பேட்டிங் செய்த இந்திய அணி அவ்வளவு எளிதாக வெற்றியை பெற்றுவிட முடியவில்லை. பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்களும் இறுதி ஓவர் வரை போராடினர்.

கடைசி இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் ஹர்திக் பாண்டியா மூன்று பவுண்டரிகள் அடித்து இந்திய அணியின் வெற்றியை சற்று எளிதாக்கினார். 20வது ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஜடேஜா ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். இதனால் மைதானத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. கடைசி மூன்று பந்துகளில் ஆறு ரன்கள் தேவைப்பட்டபோது களத்தில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்தார். நல்ல பார்மில் இருந்த அவர் ஒரு சிக்சர் அடிக்க இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் துபாய் மைதானம் கரகோஷமாக காணப்பட்டது.

- Advertisement -

இந்திய ரசிகர்கள் வெற்றியை கொண்டாடியதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் துபாய் ஷேக் ஒருவர் ஹர்திக் பாண்டியா சிக்சர் அடித்து வெற்றி பெறச் செய்தபோது மைதானத்தின் கேலரியில் எழுந்து நின்று துள்ளிக்குதித்து உடன் இருந்த நண்பர்களே கட்டிப்பிடித்து கூச்சலிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கண்ணீரை வரவழைத்துள்ளது. இந்திய அணியின் வெற்றியை தனது நாட்டின் வெற்றி போல பாவித்து அவர் இப்படி குதூகலமாக கொண்டாடிய செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.