உலக கிரிக்கெட்

இலங்கை ஆஸி டெஸ்ட் தொடர்.. இடம் தேதி அறிவிப்பு.. இந்திய அணியின் பைனல் வாய்ப்பை தீர்மானிக்கும் சீரிஸ்

இலங்கை ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் வார்னே-முரளிதரன் டிராபி டெஸ்ட் தொடருக்கான இடம் மற்றும் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரின் முடிவு இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் தாக்கத்தை உண்டாக்க அதிக வாய்ப்புகள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் சுழல் பந்துவீச்சாளர் வார்னே மற்றும் இலங்கை அணியின் ஜாம்பவான் சுழல் பந்துவீச்சாளர் முரளிதரன் இருவரது பெயரிலும் இரு நாடுகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த டெஸ்ட் தொடருக்கான இடம் மற்றும் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அணிக்கு கடினமான சூழ்நிலை

இந்திய அணி தற்பொழுது உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை தோற்று இருப்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கடினமானதாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில் தற்பொழுது இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியை மும்பையில் வைத்து விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியை வென்றால் மேற்கொண்டு ஆஸ்திரேலியா சென்று மூன்று டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வார்னே-முரளிதரன் டிராபி இடம் தேதி அறிவிப்பு

இலங்கை ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் இலங்கையில் காலே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி ஆரம்பித்து பிப்ரவரி 2ஆம் தேதி வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி ஆரம்பித்து பிப்ரவரி 10ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க : நியூஸி 235 ரன்.. 8 ரன்னில் 3 விக்கெட்.. கடைசி நேரத்தில் சரிந்த இந்திய அணி.. மும்பை டெஸ்ட் முக்கிய நிலவரம்

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இரண்டு அல்லது மூன்று டெஸ்ட் போட்டிகளை வெல்லும் பொழுது, இலங்கை அணி தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்து, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சொந்த மண்ணில் வெற்றி பெறும் பொழுது, அது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு உதவியாக அமையலாம் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -
Published by

Recent Posts