இன்று மும்பையில் தொடங்கிய இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி பேட்டிங் கடைசி நேரத்தில் சரிவை சந்தித்திருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோற்று தொடரை இழந்து விட்டது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு மூன்றாவது போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்கியது.
நியூசிலாந்துக்கு கிடைத்த சாதகம்
இந்த போட்டிக்கான மும்பை ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்தது. இதில் நியூசிலாந்து அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணிக்கு முதல் மூன்று முக்கிய பேட்ஸ்மேன்கள் டாம் லாதம் 28, கான்வே 4, ரச்சின் ரவீந்தரா 5 ரங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதைத் தொடர்ந்து வில் யங் 138 பந்துகளில் 71 ரன்கள், டேரில் மிட்சல் 129 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து டாம் ஃப்ளூண்டல் 0, கிளன் பிலிப்ஸ் 17 ரன்கள் எடுத்தார்கள். இறுதியாக நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா ஐந்து மற்றும் வாஷிங்டன் சுந்தர் நான்கு விக்கெட் கைப்பற்றி விட்டார்கள்.
வழக்கம்போல் ஏமாற்றிய இந்திய அணி
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோஹித் சர்மா 18 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி நேரத்தில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் கடைசி நேரத்தில் இருந்தது.
இதற்கு அடுத்து ஜெய்ஸ்வால் 52 பந்தில் 30 ரன்கள், முகமது சிராஜ் 0, அடுத்து வந்த விராட் கோலி துரதிஷ்டவசமாக 6 பந்தில் நான்கு ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இந்திய அணி தற்போது நான்கு விக்கெட் இழப்புக்கு 19 ஓவர்களில் 86 இடங்கள் எடுத்து இருக்கிறது. கடைசி எட்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளையும் இழந்து இருக்கிறது.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. சாம்சன் சொல்லியே தக்க வைத்தோம் நீக்கினோம்.. அஸ்வின் ஜெய்ஸ்வால் முடிவு – ராகுல் டிராவிட் பேட்டி
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த மூன்று கோட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி கொத்தாக விக்கெட்டுகளை கொடுத்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. இது மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்து இருக்கிறது.






