நான் அணியில் இடம் பெறுவதை விட இந்திய அணியின் வெற்றி தான் எனக்கு முதலில் முக்கியம் – நெகிழ வைக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்

0
117

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்தது. மீதம் ஒரு போட்டி எதிர்பாராதவிதமாக நடைபெறாமல் போனது அப்போட்டி மீண்டும் தற்போது வருகிற ஜூலை 1ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. நான்கு போட்டிகளில் முடிவில் இந்திய அணி 2-1 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தோல்வியை தவிர்க்க வெற்றி பெற வேண்டும் அதே சமயத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்ற வெற்றி அல்லது சமன் செய்ய வேண்டும்.

- Advertisement -

கேப்டன் ரோஹித் ஷர்மா கொரோனா காரணமாக தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் விளையாட முடியாத காரணத்தினால் அவருக்கு பதிலாக மயன்க் அகர்வால் இந்திய அணியில் ஓபனராக களமிறங்க போவதும் குறிப்பிடத்தக்கது.

நான் விளையாடுவதை விட அணியின் வெற்றி தான் முதலில் முக்கியம்

கடந்த ஆண்டு நடந்த நான்கு போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் இடம் பெறவில்லை. தற்பொழுது ராகுல் டிராவிட் தலைமை இருக்கும் பட்சத்தில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்க ஒரு வாய்ப்பு உள்ளது. இது சம்பந்தமாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் நமக்கு பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

அணியில் இடம் பெறுவது குறித்து பெரிதாக யோசிக்கவில்லை.5வது டெஸ்ட் போட்டியில் என்னுடைய பந்துவீச்சு அணிக்கு தேவைப்படும் பட்சத்தில் நான் தேர்ந்தெடுக்கப்படுவேன். ஒருவேளை என்னுடைய பந்துவீச்சு அந்த சூழ்நிலையில் தேவைப்படவில்லை என்றால் வெளியே அமர்வதில் எனக்கு எந்தவித சிரமமும் இல்லை. என்னை பொறுத்தவரையில் அணியின் வெற்றி தான் முதலில் முக்கியம்.

இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதே மிக முக்கியம். இந்திய அணி டெஸ்ட் கோப்பையை கைப்பற்றினால் பின்னாளில், “இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்திய டெஸ்ட் தொடரில் நானும் ஒரு பங்காக இருந்தேன் என்று சொல்லிக் கொள்வேன்”. எனவே நான் அணியில் இடம் பெற்று விளையாடுவேனா அல்லது விளையாடமாட்டேனா என்பதில் எனக்கு கவலை இல்லை. என்னை பொறுத்தவரையில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.