இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் நடைபெற்று முடிந்திருக்கிற இரண்டு போட்டிகளையும் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்த இரண்டு போட்டிகளிலும் அபாரமாக விளையாடி ஆட்டம் இழக்காமல் இரண்டு அரை சதங்களை சிவம் துபே அடித்திருக்கிறார்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறாததால், அவருடைய இடத்திற்கு சிவம் துபே கொண்டுவரப்பட்டார். ஆனால் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று கருதப்பட்டது.
ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் சிவம் துபேவை ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக பார்த்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு முதல் போட்டியில் வாய்ப்பு கொடுத்தார்கள்.
முதல் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 40 பந்துகளில் 60 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் எடுத்த சிவம் துபே, இரண்டாவது போட்டியிலும் ஆட்டம் இழக்காமல் 32 பந்தில் 63 ரன்கள் ஒரு விக்கெட் எடுத்தது அசத்தினார். டி20 உலக கோப்பை இந்திய அணியின் வாய்ப்புக்கான ரேஸில் தற்பொழுது இவரும் கலந்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய செயல்பாடுகள் சிறப்பாக மாறியது குறித்து பேசிய சிவம் துபே கூறும்பொழுது “சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் மகி பாய்க்கும் எல்லா பெருமையும் சேரும். ஏனென்றால் எனக்குள் எப்பொழுதும் ஒரு ஆட்டம் இருக்க செய்தது. ஆனால் அதை வெளியே கொண்டு வந்தது இவர்கள்தான்.
ஐபிஎல் தொடரில் என்னால் ரன்கள் அடிக்க முடியும் என்று என்னிடம் எப்பொழுதும் அவர்கள் கூறிக் கொடுத்த நம்பிக்கைதான் எல்லாத்துக்கும் காரணம். அவர்கள் கவலைப்பட வேண்டாம் உங்களால் முடியும் என்று கூறினார்கள். இதையே மைக் ஹஸ்சி மற்றும் பிளமிங் எல்லோரும் சொன்னார்கள். அவர்களின் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள்” என்று கூறினார்.