கேப்டனாக அறிமுகமாகும் முதல் டெஸ்ட் போட்டியில் முன்னாள் இங்கிலாந்து வீரர் பெயர் கொண்ட ஜெர்சியை பென் ஸ்டோக்ஸ் அணிந்த காரணம் இதுதான்

0
161

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 132 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்துள்ளது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கிராண்ட்ஹோமி 42* ரன்கள் குவித்தார்இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் மேட்டி பாட்ஸ் தல 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

தற்பொழுது இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழந்த நிலையில் 92 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. தற்பொழுது களத்தில் ஜானி பேர்ஸ்டோ மற்றும் அலெக்ஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

முன்னாள் இங்கிலாந்து வீரர் பெயர் கொண்ட ஜெர்சியை அணிந்து வந்த பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணியை இன்று முதல் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்குகிறார். கேப்டனாக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. டாஸ் போடும் நேரத்தில் அவர் முன்னாள் இங்கிலாந்து வீரர் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து வந்தார்.

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரஹாம் தார்பீ தற்பொழுது மருத்துவமனையில் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார். எனவே அவருடைய உடல்நலம் சரியாக வேண்டும் வண்ணம் பென் ஸ்டோக்ஸ் இவ்வாறு அவரது பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து கொண்டு வந்திருக்கிறார். மேலும் பேசிய அவர் தான் அவரது மனைவியுடன் பேசியதாகவும்,குடும்பம் சம்பந்தமான விஷயங்களுக்கு பெற்ற தனியுரிமைக்கு அவர் நன்றி தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான கிரஹாம் 1993 முதல் 2005 வரை இங்கிலாந்து அணிக்கு 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் இதுவரை 6744 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்கு இவர் பேட்டிங் கோச்சாக பணியாற்றி பின்னர் கிறிஸ் சில்வர்வுட்டுக்கு துணை பயிற்சியாளராக செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவர் ஆப்கானிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.