“நேற்று ஏற்பட்ட வலி.. இப்போது கூட குறையவில்லை..!” – கில் உருக்கமான பேச்சு!

0
3667
Gill

இது முடிவு அல்ல.. வெற்றி பெறாமல் ஓய மாட்டோம்.. உலககோப்பை தோல்வி குறித்து கில் சூளுரை

ஐசிசி உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் மிஞ்சி இருக்கிறது.

- Advertisement -

தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்றதால் இம்முறை உலககோப்பை உறுதி என 130 கோடி ரசிகர்களும் நம்பினர். ஆனால் கடைசி இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள நட்சத்திர வீரர் சகில் இறுதிப்போட்டி முடிந்து 16 மணி நேரம் ஆகிவிட்டது .

ஆனால் நேற்று இரவு எப்படி வலித்ததோ அதேபோல் இன்னும் மனது வலிக்கிறது. சில நேரம் நாம் எவ்வளவு நாம் உழைத்தாலும் அது வெற்றிக்கு போதுமானதாக இருக்காது. நீங்கள் குறிக்கோள் அடைய சிறிது தூரம் இருந்த நிலையில் நாங்கள் அதனை அடையாமல் தோற்று விட்டோம்.

எனினும் இந்த பயணத்தில் எங்களுடைய ஒவ்வொரு அடியும் எங்கள் அணியின் உத்வேகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும். எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ரசிகர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய இன்ப காலத்திலும் துன்ப காலத்திலும் ஆதரவு கொடுக்கும் நீங்கள் தான் எங்களுடைய உலகம் நிச்சயமாக இது முடிவு கிடையாது.

- Advertisement -

நாங்கள் வெற்றி பெறும் வரை ஓய மாட்டோம். ஜெய் ஹிந்த் என்று கில் கூறியிருக்கிறார்.நேற்றைய இறுதி ஆட்டத்தில் தமக்கு பிடித்த மைதானத்தில் விளையாடுவதால் சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் 4 ரன்களில் வெளியேறினார்.

இது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது உலக கோப்பையில் அடைந்த தோல்விக்கு சூளுரை மேற்கொண்டு இருக்கிறார். இனி அடுத்த டி20 உலக கோப்பையில் ஆவது இந்திய அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -