இந்திய கிரிக்கெட்

பைனலில் இந்த இந்திய வீரர்தான் பெரிய பிரச்சனை.. அவர சமாளிக்கணும் – நியூஸி கோச் பேச்சு

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் தங்கள் அணிக்கு எதிராக இந்திய அணியில் எந்த வீரர் மிகவும் அச்சுறுத்தலாக இருப்பார் என்பது குறித்து நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நாளை மறுநாள் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 2000 ஆண்டு நடைபெற்ற சாம்பியன் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மோதிக்கொண்ட பொழுது இந்திய அணி வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணிக்கு அச்சுறுத்தல்

இந்த நிலையில் இரு அணிகளும் ஏற்கனவே இந்த தொடரின் லீக் சுற்றில் இதே துபாய் மைதானத்தில் மோதி இருக்கின்றன. இந்த குறிப்பிட்ட போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி வருண் சக்கரவர்த்தி மிக முக்கிய காரணமாக இருந்தார். அவரது பந்தை கணிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் சிரமப்பட்டார்கள்.

இதுகுறித்து நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறும் பொழுது “கடந்த ஆட்டத்தில் எங்களுக்கு எதிராக வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றிய பிறகு, அவர் நிச்சயம் அடுத்த ஆட்டத்தில் விளையாடுவார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் ஒரு கிளாஸ் பவுலர். எங்களுக்கு எதிராக மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தினார். மேலும் அவர் எங்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகவும் இருந்தார்”

- Advertisement -

இந்திய அணி ஒரே இடத்தில் விளையாடட்டும்

“இந்திய அணி ஒரே இடத்தில் விளையாடுகின்ற முடிவு எங்கள் கைகளில் இல்லை. எனவே இது குறித்து நாங்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதும் இல்லை. இந்தியாவுக்கு அவர்களுடைய அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாட வேண்டும் என்று இருக்கிறது. நாங்கள் இங்கு ஏற்கனவே ஒரு போட்டியில் விளையாடுகிறோம். எனவே அதை வைத்து நாங்கள் மிக விரைவாக கற்றுக் கொள்வோம்”

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி.. நியூசிலாந்தின் வெற்றிக்கு தோனி தான் காரணம்.. வசீம் ஜாஃபர் கருத்து

“தற்போது தொடரின் உச்சநிலைக்கு வந்திருக்கிறோம். எட்டு அணிகளுடன் ஆரம்பித்தது தற்போது இரண்டு அணிகளுக்கு வந்து நின்று இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இருப்பது எப்பொழுதுமே உற்சாகமான ஒன்று. இப்போது எங்கள் பார்வையில் இந்தியாவுக்கு எதிராக ஒரு முக்கியமான போட்டி வருகிறது. நாங்கள் அந்த போட்டியில் வெற்றி பெறக்கூடிய இடத்தில் இருந்தால் மகிழ்ச்சி அடைவோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by