ஐபிஎல் கோப்பையில் ஒளிந்திருக்கும் மர்மம்! சமஸ்கிருத மொழியில் என்னதான் எழுதி இருக்கிறது? அதன் அர்த்தம் என்ன?

0
411
Ipl2023

உலகத்தின் நம்பர் 1 டி20 லீக்கான இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 தொடரின் 16 வது சீசன் இன்றுடன் முடிவுக்கு வர இருக்கிறது!

இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடர் இரண்டு மாதங்களாக நடைபெற்று இன்று உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் முடிவுக்கு வருகிறது!

- Advertisement -

வீரர்களின் சம்பளம், வீரர்களுக்கான வசதிகள், தொடர் மூலம் ஈட்டப்படும் வருமானம், போட்டிகளின் தரம் என்று ஐசிசி தொடர்கள் கூட அருகில் வர முடியாத அளவுக்கு ஐபிஎல் தொடரின் வசதி வாய்ப்புகள் மிகப் பெரிதாக இருக்கிறது!

மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டில் முதல் விளையாட்டாக இருப்பதால் ஐபிஎல் தொடர் வெற்றியடைந்ததில் பெரிய ஆச்சரியம் எதுவும் கிடையாது.

தற்பொழுது ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்படும் கோப்பையில் சமஸ்கிருத வாசகம் ஒன்று பொறிக்கப்பட்டிருக்கிறது. அது பலருக்கும் தெரியாத செய்தியாக இருக்கிறது.

- Advertisement -

“யத்ர பிரதிபா அவசர ப்ராப்னோதிஹி” என்பது ஐபிஎல் கோப்பையில் பொறிக்கப்பட்ட செய்தியாகும். இந்த சமஸ்கிருத வாக்கியத்தின் அர்த்தம் என்ன? என்பது குறித்து செய்தி வெளிவந்ததும் பரவலாக அலசப்பட்டது.

இந்த சமஸ்கிருத வாசகத்தின் தமிழ் அர்த்தம் ” திறமை வாய்ப்புகளை சந்திக்கும் இடம்” என்பதாகும். திறமை உள்ளவர்கள் வாய்ப்பு பெறுவதற்கான மிகச்சிறந்த களம் ஐபிஎல் தொடர் என்பதை அர்த்தப்படுத்துவதாக இந்த சமஸ்கிருத வாக்கியம் அமைந்துள்ளது.