நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 36வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ஆவேஷ் கான் வெற்றி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ராஜஸ்தானில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் அதிகபட்சமாக 66 ரன்கள் குவித்தார். மிடில் வரிசை பேட்ஸ்மேன் பதோனி 54 ரன்கள், இறுதிக்கட்டத்தில் அப்துல் சமாத் 10 பந்துகளில் 30 ரன்கள் குவித்தனர்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வரிசையில் இறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவம்சி கூட்டணி முதல் விக்கெட்டுக்கு ஒன்பது ஓவர்களில் 85 ரன்கள் குவித்தனர். பிறகு வைபவ் 34 ரன்னில் வெளியேற, அதற்குப் பின்னர் களம் இறங்கிய பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட ஆரம்பித்தனர். பின்னர் இறுதிக்கட்டத்தில் ஆவேஸ்கான் அபாரமாக பந்துவீசி 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த வெற்றி குறித்து அவர் கூறும் போது “என் கைகள் இப்போது நன்றாக இருக்கிறது. என் எலும்புகள் உடைந்து விட்டது என்று நினைத்தேன். அதனால்தான் அணி வெற்றி பெற்ற போதும் அதனை கொண்டாடவில்லை. நான் மிச்சல் ஸ்டார்க் ஆக மாற விரும்பவில்லை. நல்ல ஆவேஸ் கானாக இருக்க விரும்புகிறேன். எனது பந்துவீச்சில் யார்கர் தான் பெரிய பலம். அதனை நான் செயல்படுத்த விரும்புகிறேன். நான் எந்த குழப்பமும் இல்லாமல் தெளிவோடு பந்து வீசினால் அதனை நான் நன்றாக செயல்படுத்துகிறேன். நான் எப்போதுமே ஸ்கோர் கார்டை பார்த்து பந்து வீசவில்லை.
இதையும் படிங்க:6 பந்து 9 ரன் தேவை.. ஆவேஸ்கான் அபாரமான பவுலிங்.. ஜெய்ஸ்வால் போராட்டம் வீண்.. 2 ரன்னில் ராஜஸ்தானை வீழ்த்திய லக்னோ அணி
மேலும் முதல் மூன்று பந்துகளில் பௌண்டரிகள் விட்டுக் கொடுப்பது விருப்பமில்லை. டேவிட் மில்லர் அந்த கேட்ச் வாய்ப்பை விட்ட பிறகு ராஜஸ்தான் வெற்றி பெற நான்கு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. எனவே ராஜஸ்தான் ஏதோ ஒரு வகையில் அதை முயற்சித்து பவுண்டரி அடித்து விடுமோ என்று பயந்தேன். இருப்பினும் அனைத்தும் நன்றாக அமைந்து நாங்கள் வெற்றி பெற்று விட்டோம். எனவே இனிவரும் போட்டிகளிலும் இதே முறையில் நான் பந்து வீசி போட்டிகளை வெல்ல விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






