2021-ல் இது தான் இந்திய அணியின் கடைசி ஒரு நாள் போட்டியா- ரசிகர்கள் அதிர்ச்சி

0
774
Team India Champions

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கி வென்று தொடரை கைப்பற்றியது . 23.07.2021 அன்று நடைப்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணிக்கு அந்த போட்டி தான் இந்த வருடத்தின் கடைசி போட்டியாகும் . கேட்கவே அதிர்ச்சியா இருக்குல்ல . நீங்க நம்பலானாலும் அதான் நெசம் .

தற்போது இங்கிலாந்திற்க்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள இந்திய அணி மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது . ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா காரணத்தினால் பாதி ஐ.பி.எல் மட்டுமே நடந்துள்ளது இதன் மீது போட்டிகள் அரபு ஐக்கிய நாடுகளில் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 வரை நடைப்பெறுகிறது.

- Advertisement -

இங்கிலாந்து தொடர் முடிந்த கையுடனே இந்திய அணி ஐக்கிய அரபுநாடு செல்கிறது . ஐ.பி.எல் முடிந்தவுடன் இந்திய அணி டி20 உலகக்கோப்பை விளையாடுகிறது . ஐ.பி.எல் முடிந்த அடுத்து இரண்டு நாட்களில் டி20 உலகக்கோப்பை தொடங்குகிறது. அக்டோபர் 17 முதல் தொடங்கி நவம்பர் 14 வரை டி20 உலகக்கோப்பை நடைபெறவிருக்கிறது .

Team India Champions

இந்த சுற்றுப்பயணம் முடிந்ததும் இந்தியாவிற்க்கு நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்க்கொள்கிறது . இந்த தொடரில் இந்திய அணியுடன் 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது . நவம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறவுள்ளது . இந்த தொடரை தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்ரிக்காவிற்க்கு சுற்றுப்பயணம் மேற்க்கொள்ளவுள்ளது . 3 டெஸ்ட் போட்டிகள் 3 டி20 போட்டிகள் கொண்ட இத்தொடர் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி வரை நடைபெறவிருக்கிறது . இத்தொடரே இந்த ஆண்டின் கடைசி தொடராகும் . இந்த ஆண்டில் தொடர்ந்து பல்வேறு தொடர்கள் பல்வேறு சுற்றுப்பயணம் மேற்க்கொள்ளவிருக்கும் இந்திய அணிக்கு ஒருநாள் தொடர் கொண்ட சுற்றுப்பயணம் எதுவும் இல்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.

- Advertisement -

இவற்றையெல்லாம் கணக்கிடும் பொழுது இந்திய அணி இலங்கையுடன் விளையாடிய மூன்றாவது போட்டியே இந்த ஆண்டின் இந்திய விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியாகும். தற்போது இந்திய அணி இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடுவது போல வருங்காலத்தில் நடக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு ஒருநாள் தொடர் நடைபெற வாய்ப்பிருக்கிறது.

- Advertisement -