இந்திய கிரிக்கெட்

256 ரன்.. டி20 உலக கோப்பையில் இந்தியா வரலாற்று சாதனை.. விழி பிதுங்கிய ஜிம்பாப்வே.. ஃபார்முக்கு வந்த வீரர்கள்

இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சாதனை ஸ்கோர் எடுத்து அதிரடிக்கு திரும்பி இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் தோல்வியடையும் அணி செமி பைனல் வாய்ப்பில் இருந்து வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் படேல் இருவரும் திரும்பி வந்தார்கள்.

சிறந்த தொடக்கம்

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 15 பந்தில் 24 ரன்கள், அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் அவர் பங்குக்கு அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக இந்திய அணி சிறப்பான நிலையில் மிடில் ஓவர்களுக்கு சென்றது.

- Advertisement -

வெளுத்த திலக் ஹர்திக்

இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்ததில் திலக் வர்மா 16 பந்துகளில் 40 ரன்கள், ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வே அணியை மிரள விட்டார்கள். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க: இந்தியா யாரும் எதிர்பார்க்காத மாற்றம்.. தெ.ஆ போட்டிய மறந்துடுங்க.. நிச்சயம் ஜெயிப்போம் – சூரியகுமார் பேச்சு

இந்த உலகக் கோப்பை தொடரில் அதிகபட்ச ஸ்கோரை இந்திய அணி பதிவு செய்தது. மேலும் ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆக இது அமைந்தது. டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு இதுவே அதிகபட்ச ஸ்கோர். இதில் முதல் இடத்தில் இலங்கை கென்யா அணிக்கு எதிராக 260 ரன்கள் எடுத்தது இருக்கிறது.

- Advertisement -
Published by