இந்திய கிரிக்கெட்

நேத்து எங்களுக்கு துரதிஷ்டமான நாள்.. அந்த 2 விஷயங்கள் தப்பா போயிடுச்சு – இந்திய பேட்டிங் கோச் பேச்சு

நேற்று இந்திய அணிக்கு துரதிஷ்டமான ஒரு நாளாக அமைந்து விட்டதாகவும், பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் தாங்கள் எதிர்பார்த்த தாகமும் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்து 471 ரன்கள் எடுத்தது. அதே சமயத்தில் கடைசி ஏழு விக்கெட்டுகளை வெறும் 41 ரன்னுக்கு இழந்தது. இது இந்திய பேட்டிங் யூனிட்டின் கவலை தரும் அம்சமாக மாறி இருக்கிறது. இந்திய அணி குறைந்தபட்சம் 600 ரன்கள் எடுத்து இரண்டாவது முறையாக பேட்டிங் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

பீல்டிங்கில் பெரிய ஓட்டை

இந்திய அணிக்கு புதிய பீல்டிங் பயிற்சியாளரை கொண்டு வருவதற்கு பிசிசிஐ முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் சரியான பயிற்சியாளர் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இந்திய அணி வீரர்களின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. இதன் காரணமாக பென் டக்கெட் அரை சதம் அடித்தார் மற்றும் ஒல்லி போப் சதம் அடித்தார்.

இந்திய அணி மிகச் சிறப்பாக நேற்று முடித்திருக்க வேண்டிய நிலையில் இதுவெல்லாம் சேர்ந்து பெரிய துரதிஷ்டமான நாளாக மாறிவிட்டது. இந்த நிலையில் வெல்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பை இந்திய அணி ஒட்டுமொத்தமாக இழந்து இருக்கிறது. இது இந்திய அணி நிர்வாகத்தை கவலை அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -

துரதிஷ்டமான நாள்

இது குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக் பேசும் பொழுது “பேட்டிங் பொருத்தவரையில் எங்களுக்கு ஒரு சிறிய சரிவு ஏற்பட்டிருக்கிறது என்று நான் சொல்லுவேன். நாங்கள் 41 ரன்னுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்தோம். இதில் பேட்ஸ்மேன்களும் அடக்கமாக இருக்கிறார்கள். எனவே இதை நான் சரிவு என்று தான் சொல்லுவேன். நாங்கள் பேட்டிங் யூனிட்டில் இருந்து இன்னும் கொஞ்சம் ரன்களை நேற்று எதிர்பார்த்தோம் என்பது உண்மை”

இதையும் படிங்க : பும்ரா ஒரு மேதை.. பீன்ஸ் டப்பாவை திறக்கிற மாதிரி அந்த வேலைய நேத்து செஞ்சாரு – தினேஷ் கார்த்திக் பேச்சு

” நேற்று நாங்கள் சில கேட்ச் வாய்ப்பை வீணடித்ததும் மேலும் ஒரு நோபாலில் ஒரு விக்கெட்டை இழந்ததும் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. பொதுவாக களத்தில் நாங்கள் மிகவும் கூர்மையாக இருப்போம். ஒரு அணியாக நாங்கள் நேற்று நடந்த விஷயங்களில் துரதிஷ்டமாக இருந்தோம் என்று எடுத்துக் கொள்கிறோம். அதே சமயத்தில் விக்கட்டில் ஏதோ ஒன்று இருந்தது. எங்களுடைய பந்துவீச்சாளர்கள் முடிந்த வரையில் அதை சிறப்பாகவே பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்”

- Advertisement -
Published by