பும்ரா ஒரு மேதை.. பீன்ஸ் டப்பாவை திறக்கிற மாதிரி அந்த வேலைய நேத்து செஞ்சாரு – தினேஷ் கார்த்திக் பேச்சு

0
54
DK

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஒரே பந்துவீச்சாளராக பும்ரா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஜொலித்தார். இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் அவரை மேதை என பாராட்டி பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 471 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய வந்த பொழுது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் இந்திய அணிக்கு நல்ல அதிர்ஷ்டம் இருந்தது. ஆனால் இந்திய அணி வீரர்களின் பீல்டிங் மட்டமாக இருந்த காரணத்தினால் பும்ராவின் உழைப்பும் வீண் ஆனது.

- Advertisement -

மீண்டும் பும்ராவுக்கு ஆபத்து

இந்த நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய பௌலிங் யூனிட்டில் பும்ரா மட்டுமே சிறப்பானவராக இருந்தார். சிராஜ் பிரசித், கிருஷ்ணா மற்றும் சர்துல் தாக்கூர் யாருடைய பந்துவீச்சும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை எந்தவிதமான சிரமத்திற்கும் உள்ளாக்கவில்லை. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் கூட எதையும் இவர்களால் செய்ய முடியாதது கவலை தருகிறது.

ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் எந்த இந்திய வேகப்பந்துவீச்சாளரும் சரியாக செயல்படாத காரணத்தினால் பும்ரா மீது பெரிய அழுத்தம் உண்டானது. இதன் காரணமாக அவர் 5 டெஸ்ட் போட்டியும் விளையாடி காயம் அடைந்தார். மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் அதுவே நடந்தால் நிச்சயம் அவர் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் அபாயமும் இருக்கிறது. இப்படியான நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு விழுந்த மூன்று விக்கெட்டுகளையும் பும்ராவே கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

பீன்ஸ் டப்பா போல திறந்தார்

பும்ரா பற்றி தினேஷ் கார்த்திக் பேசும் பொழுது ” உங்களுக்கு பந்து லெக் ஸ்டெம்பில் மிட் பாக்ஸில் வருகிறது என்றால், ஒரு பேட்மேனாக நீங்கள் அந்தப் பந்தை லெக் சைடு விளையாடவே விரும்புவீர்கள். உங்களுடைய உள்ளுணர்வு அந்த பக்கமாக ஆடுவதற்கே உங்களை தள்ளும். எனவே நீங்கள் கொஞ்சம் உடலை அந்தப் பக்கமாக திருப்பி பேட்டுக்கு கொஞ்சம் இடம் கொடுத்து விளையாட பார்ப்பீர்கள்”

இதையும் படிங்க : கில்லும் கம்பீரும் செய்த பெரிய தப்பு.. இயற்கை கொடுத்த வாய்ப்பு வீணானது.. களத்தில் என்ன நடந்தது?

“ஜாக் கிரவுலி இந்த மாதிரி லெக் சைடு விளையாடுவதில் மிகவும் திறமையானவர். எனவே பும்ரா பந்துவீச்சில் அவர் ஆட்டம் இழந்த பந்தில் அந்த பக்கமாக பந்து இருந்ததால் விளையாடுவதற்கு சென்றார். ஆனால் பும்ரா பந்தை அங்கிருந்து வெளியே எடுத்தார். இதன் காரணமாக ஜாக் ரவுலி அப்படியே திரும்பி நின்றார். ஒரு பீன்ஸ் டப்பாவை திறப்பது போல அவரை பும்ரா திறக்க வைத்தார். பும்ரா ஒரு மேதை” என்று பாராட்டியிருக்கிறார்.

- Advertisement -