தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி போட்டியில் சுவாரசியத்தை பெரிய அளவில் குறைத்து வருகிறது. இந்த விதி இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் பெரிய அளவில் எதிரொலித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டன்கள் மீட்டிங் போது இந்த விதி குறித்து பேசப்பட்டதாக சுப்மன் கில் தெரிவித்திருந்தார். மேலும் இவருடன் சேர்ந்து அக்சர் படேல் வெளிப்படையாகவே இம்பேக்ட் பிளேயர் விதி நீக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
ருதுராஜ் புலம்பல்
இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து தோற்றது. இந்த போட்டியின் தோல்விக்கு பிறகு பேசி இருந்த ருதுராஜ் ” இம்பேக்ட் பிளேயர் விதி இருக்கின்ற காரணத்தினால் முதலில் பேட்டிங் செய்யும்பொழுது சரியான ஸ்கோர் எதுவென்று தெரியவில்லை; பேட்டிங் செய்ய கடினமான கண்டிஷன் இருந்தாலும் அதிரடியாக விளையாடுவதால் விக்கெட் போய் சுருண்டு விடுகிறோம்” என்று சொல்லி இருந்தார்.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இதுவரையில் மொத்தம் ஒன்பது போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் எட்டு போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு இம்பேக்ட் பிளேயர் விதி ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
இரண்டு சம்பவங்கள்
இன்று பகலில் நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி இரண்டாவதாக பேட்டிங் செய்யும்பொழுது இம்பேக்ட் பிளேயராக உள்ளே வந்த சமீர் ரிஸ்வி 51 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தினார். இந்த விதி இல்லாமல் இருந்திருந்தால் இவருடைய இடத்தில் ஃபினிஷர் அசுதோஸ் சர்மா விளையாடி இருப்பார்.
இதையும் படிங்க : நான் பண்ண ஒரு தப்பு தான் மும்பை தோல்விக்கு காரணம்.. ஆனா அந்த பையன் வேற மாதிரி பண்ணிட்டான் – சூரியகுமார் யாதவ் பேட்டி
இன்று இரவில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் ரவி பிஸ்னாய் இம்பேக்ட் பிளேயராக வந்து வீச வந்தார். அவர் நான்கு விக்கெட் கைப்பற்றி குஜராத் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். இம்பேக்ட் பிளேயர் விதி ஒரு தலைப்பட்சமாக மாறி ஒட்டுமொத்த போட்டியில் இருக்கும் சுவாரசியத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து பிசிசிஐ யோசிக்க வேண்டும் என ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.






