ஐபிஎல் 2024

போட்டிக்கு முன்பாகவே சர்ச்சை.. சிஎஸ்கேவுக்கு மட்டும் தனி நியாயமா?.. குஜராத் டைட்டன்ஸ் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?

இன்று நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாகவே குஜராத் டைட்டன்ஸ் அணியின் தரப்பில் இருந்து முக்கிய புகார் ஒன்று கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது குஜராத் டைட்டன்ஸ் அணி தான் விளையாடிய 11 போட்டிகளில் 7 போட்டிகளை தோற்று, 8 புள்ளிகள் மட்டும் எடுத்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. இந்த அணி ஆரம்பத்தில் பெற்ற வெற்றிகள் உடன், இரண்டாவது கட்டத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து கடைசி இடத்தில் இருக்கிறது.

அதே சமயத்தில் சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் விளையாடி ஆறு போட்டிகளை வென்று, 12 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியை வெல்வதின் மூலம் பிளே ஆப் வாய்ப்பை இன்னும்பிரகாசமாக்க முடியும். இன்றைய போட்டியை வென்றால் அதற்கு அடுத்த இருக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்றை வென்றாலும் போதுமானது.

இப்படியான நிலையில் சிஎஸ்கே அணி குஜராத் சென்று முகாம் அமைத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. தற்பொழுது சிஎஸ்கே அணியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பயிற்சி பெற்ற விஷயம் தான் சர்ச்சையானதாக மாறியிருக்கிறது. இது ஐபிஎல் நிர்வாகத்திடம் குஜராத் டைட்டன்ஸ் அணி முறையாகப் புகார் அளிக்கும் இடத்திற்கு சென்று இருக்கிறது.

- Advertisement -

ஒவ்வொரு அணிக்கும் போட்டிக்கு முந்தைய நாள், பயிற்சி அமர்வின் கடைசி ஒரு மணி நேரத்தில் ரேஞ்ச் ஹிட்டிங் பயிற்சி பெறுவதற்காக நேரம் ஒதுக்கப்படுகிறது. இதன்படி பந்தை தூக்கி சிக்ஸர்களுக்கு அடித்து பயிற்சி செய்து கொள்ளலாம். ஆனாலும் மைதானத்தின் மையத்தில் போட்டி நடைபெற இருக்கும் ஆடுகளத்தை ஒட்டி இப்படியான பயிற்சிகள் அனுமதிக்கப்படுவதில்லை. சற்று தள்ளி வேறு முனைகளில் இருந்தே கொடுக்கப்படும். இதனால் போட்டி நடக்கும் ஆடுகளும் பாதிப்படைவது தடுக்கப்படும்.

இதையும் படிங்க: இது வெட்கக்கேடானது.. கேஎல் ராகுலை இப்படி நடத்தி செங்கோட்டையில் கொடியா ஏத்தினிங்க – முகமது சமி கோபம்

தற்போது சிஎஸ்கே அணிக்கு போட்டி நடைபெறும் ஆடுகளத்தை ஒட்டி மையத்தில் இருந்து ரேஞ்ச் ஹிட்டிங் பயிற்சி செய்ய அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. தற்பொழுது இதுதான் சர்ச்சையாக மாறியிருக்கிறது. இதற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் இல்லாமல், ஐபிஎல் நிர்வாகத்திடம் முறையாக புகாரும் தெரிவித்து இருக்கிறது. முக்கியமான போட்டிக்கு முன்பாக, இந்த சர்ச்சையால் இன்னும் களம் சூடு பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by