பைனல் இந்த ரெண்டு டீம்தான் ; கப் இந்த டீமுக்குத்தான் ; ஏ.பி.டிவில்லியர்ஸ் கணிப்பு!

0
58301
De villiers

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்து அரை இறுதி சுற்று போட்டிகள் நாளை துவங்க உள்ளது!

இந்த அரை இறுதி சுற்றில் முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியை சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் சந்திக்கிறது!

- Advertisement -

இன்னொரு இரண்டாவது அரை இறுதி போட்டியில் இந்திய அணி அடி லைடு மைதானத்தில் இங்கிலாந்து அணியை இந்திய நேரப்படி 1 :30 மணிக்கு சந்திக்கிறது!

நியூசிலாந்து அணி கடந்த ஏழு வருடங்களுக்குள் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு வந்து இருக்கிறது. இதேபோல் கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கும் வந்தது. மேலும் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வந்து சாம்பியனும் ஆனது. நியூசிலாந்து அணி உலக கோப்பை தொடர்களுக்கு மட்டுமென்று தனியாக தயாரிக்கப்பட்ட அணி போல் சமீபக் காலமாக விளங்கி வருகிறது.

இந்த நிலையில் கிரிக்கெட் உலகின் நவீன கிரிக்கெட்டின் அடையாளமாக பார்க்கப்படும் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் எந்த இரு அணிகள் அரையிறுதியில் இருந்து இறுதிப் போட்டிக்கு வரும் மேலும் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று தனது கணிப்பை கூறியிருக்கிறார்!

- Advertisement -

ஏபி.டிவில்லியர்ஸ் கூறும்பொழுது “நியூசிலாந்து இந்தியா இரண்டு அணிகளும் அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டியில் சந்திக்கும் என்று நினைக்கிறேன். இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது ” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இந்திய அணியில் அனைவரும் நன்றாக விளையாடுகிறார்கள். சூரியகுமார் நல்ல பார்மில் இருக்கிறார் அதே போல் விராட் கோலியும் நல்ல பார்மில் இருக்கிறார். ரோகித் சர்மாவிடமிருந்து இன்னும் ரன்கள் வரவில்லை. ஆனால் அவர் நிச்சயம் ரன்களை கொண்டு வருவார். மிக முக்கியமானது அவர் ஒரு அற்புதமான வீரர். இந்திய அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் மிகத் திறமையானது அவர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இது அவர்களுக்கான மிக சோதனையான ஒரு ஆட்டம். இதில் அவர்கள் வெற்றி பெற்றால் நிச்சயம் இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றுவார்கள்” என்று கூறியுள்ளார்!