உலக கோப்பை தோல்வி எதிரொலி.. 33 வயது இங்கிலாந்து நட்சத்திர வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு.. அடிக்கு மேல் அடி!

0
5497
Willey

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து அணியின் செயல்பாடு யாராலும் நம்ப முடியாத ஒன்றாக அதிர்ச்சிகரமாக இருக்கிறது.

இதுவரை இங்கிலாந்து அணி விளையாடிய 6 போட்டிகளில் ஐந்து போட்டிகளை தோற்று ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் புள்ளி பட்டியலில் இங்கிலாந்து அணி 10வது இடத்தில் இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபி தொடரில் விளையாட, நடப்பு உலகக் கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் எட்டு இடங்களுக்குள் வந்தால் மட்டுமே முடியும். இங்கிலாந்து அணி மேற்கொண்டு இதற்க்காவது முயற்சி செய்ய வேண்டிய இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் 33 வயதான டேவிட் வில்லி திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். இந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் அவர் ஓய்வு பெறுவதாக கூறியிருக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் திடீரென ஜோப்ரா ஆர்ச்சரை இங்கிலாந்து அணி உள்ளே கொண்டு வந்து, வெகு நாட்களாக உழைத்து வந்த இவரை நீக்கியது. பெரிய மனக்காயம் பட்டாலும் கூட தொடர்ந்து உழைத்து இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியில் ஒரு அங்கமாக மாறினார். கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம் பெற்றார்.

- Advertisement -

இவர் முதன் முதலில் இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 2015ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார். இதே ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக நியூசிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 70 போட்டிகளில் 94 விக்கெட் மற்றும் 627 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 43 போட்டிகளில் 51 விக்கெட் மற்றும் 226 ரன்களும் எடுத்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இவர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஓய்வு முடிவு குறித்து பேசி உள்ள டேவிட் வில்லி கூறும் பொழுது “இப்படி ஒருநாள் வருவதை நான் என்றுமே விரும்பியதில்லை. சிறுவயதிலிருந்தே இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன். சிறந்த வீரர்கள் சிலருடன் சிறப்பான வெள்ளைப்பந்து இங்கிலாந்து அணியில் இருந்தேன். யோசித்துப் பார்க்கையில் இதுவே ஓய்வு பெற சரியான நேரம் என்று தோன்றியது. எனவே ஓய்வு முடிவை இந்த உலகக் கோப்பையுடன் அறிவித்துவிட்டேன். ஆதரித்த எல்லோருக்கும் நன்றி!” எனக் கூறியிருக்கிறார்!