கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

302 ரன் வித்தியாசம்.. 55 ரன்னில் இலங்கையை சுருட்டி அரை இறுதியில் இந்தியா.. தெறித்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்!

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இந்திய அணி இலங்கை எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

இன்று இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இலங்கை கேப்டன் முதலில் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தார். இந்திய அணியில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இலங்கை தரப்பில் தனஞ்செய டி சில்வா நீக்கப்பட்டு ஹேமந்த் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த முறை ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் நான்கு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பான அடித்தளத்தை உருவாக்கினார்கள்.

சதத்தை நெருங்கி 92 ரன்களில் ஆட்டம் இழந்தார். விராட் கோலியின் 88 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து சதத்தை தவறவிட்டார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த கேஎல்.ராகுல் 21 ரன்களிலும், சூரியகுமார் யாதவ் 12 ரன்கள் இன்னும் ஆட்டமிழக்க, கொஞ்சம் இந்திய அணிக்கு ரன்கள் குறையும் போல் தெரிந்தது. இந்த நிலையில் ஸ்ரேயாஸ் அதிரடியாக விளையாடி 56 பந்தில் 82 ரன்கள் குவித்து இவரும் சதத்தை தவறவிட்டு ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து கடைசிக் கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா 34 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து பந்துவீச்சுக்கு வந்த இந்திய அணிக்கு பும்ரா முதல் பந்தியிலேயே நிசாங்க விக்கெட்டை கைப்பற்றினார். இதற்கு அடுத்து இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் கருணரத்னே விக்கெட்டை முகமது சிராஜ் கைப்பற்றினார். அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் சதிரா சமரவிக்ரமா விக்கெட்டையும் கைப்பற்றினார். இந்த மூன்று பேரும் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து மீண்டும் இலங்கை அணியின் கேப்டன் குஷால் மெண்டிஸ் விக்கெட்டை ஒரு ரன்களில் கைப்பற்றினார். இந்த இடத்தில் இலங்கை அணி மூன்று வருடங்களுக்கு நான்கு விக்கெட் இழந்திருந்தது.

இதற்கு அடுத்து பந்துவீச்சுக்கு வந்த முகமது சமி கடகடவென்று சரித் அசலங்கா 1, மேத்யூஸ் 12, ஹேமந்த் 0, சமீரா 0, ரஜிதா 14 என அடுத்தடுத்து ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். கடைசி விக்கெட்டாக 5 ரன்களில் மதுசங்கா விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். முடிவில் 55 ரன்களில் இலங்கை ஆல் அவுட் ஆக இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் தரப்பில் முகமது சமி ஐந்து ஓவர்களில் 18 ரன்கள் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார். முகமது சிராஜ் 7 ஓவர்களில் 16 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். பும்ரா ஐந்து ஓவர்களுக்கு 8 ரன் தந்து ஒரு விக்கெட் பற்றினார். இறுதியாக ஜடேஜா தனது முதல் ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இந்திய அணி இன்று பெற்ற ரன் வித்தியாச வெற்றி சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது பெரிய ரன் வித்தியாசமாகும். இதே உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது உலக சாதனையாக இருந்து வருகிறது.

இந்திய அணி விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகள் உடன் முதல் இடத்தை மீண்டும் புள்ளி பட்டியலில் கைப்பற்றி இருக்கிறது. மேலும் இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணியின் ரன் ரேட் +2க்கு வந்திருக்கிறது. மேலும் இந்த வெற்றியின் மூலம் முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்று இருக்கிறது!

Published by