இந்திய கிரிக்கெட்

கில் பத்தி ஒரு முடிவெடுத்து ஒரு பிளேயர் கிட்ட சொல்லிட்டோம்.. இந்த ஆடுகளம் இப்படி தான் – ரிஷப் பண்ட் பேச்சு

இந்தியா தென் ஆப்பிரிக்கா எங்களுக்கு இடையே நாளை தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய கேப்டன் ரிஷப் பண்ட் போட்டி குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.

- Advertisement -

நாளை அஸாம் கெளஹாத்தி மைதானத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி காலை 9 மணிக்கு துவங்க இருக்கிறது. இந்திய அணி இந்த போட்டியை கட்டாயம் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் ரிஷப் பண்ட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் கழுத்தில் காயம் அடைந்த காரணத்தினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இதன் காரணமாக துணை கேப்டன் ரிஷப் பண்ட் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் கொல்கத்தா ஆடுகளம் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. இந்த நிலையில் ஆடுகளம் இரண்டாவது போட்டிக்கு எப்படி இருக்கும்? மேலும் சுப்மன் கில் இடத்தில் விளையாடும் வீரர் யார்? என்பது குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டி அளித்திருக்கிறார்.

- Advertisement -

வீரரிடம் சொல்லிவிட்டோம்

இதுகுறித்து ரிஷப் பண்ட் பேசும் பொழுது “கில் இடத்தில் யார் விளையாடுவது என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம். அந்த வீரரிடம் இது குறித்து நாங்கள் தெரிவித்து விட்டோம். கில் நன்றாக இருக்கிறார். மேலும் வேகமாக குணம் அடைந்து வருகிறார். இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு அவர் கடைசி வரையில் முயற்சி செய்தார். நான் அவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறேன்”

இதையும் படிங்க : IND vs SA நாளை 2வது டெஸ்ட்டில்.. முதல் முறையாக நடக்கப் போகும் வரலாற்று மாற்றம் – முக்கிய தகவல்

“நீங்கள் அடியில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் கவனத்தில் வைத்திருக்கிறோம். மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்ய சாதகமாகவே இருக்கும். பிறகுதான் சுழல் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by