அந்தப் பையனுக்கு பயமில்லை ; பவுலருக்கு விளையாடாமல் பந்துக்கு விளையாடறான் – ரோகித் சர்மா பேச்சு!

0
367
Rohit sharma

நடைபெற்று வரும் 16 வது சீசன் ஐபிஎல் தொடரில் நான்காவது பலமிக்க அணியாக யார் இருப்பார்கள் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தப் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் அணியாக ஹைதராபாத் கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஹைதராபாத் அணியும் மும்பை அணியும் இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதிய போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது!

மும்பை அணி டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்து ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்த பொழுது இந்த ரன்கள் சவாலான இலக்காகவே கருதப்பட்டது!

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணிக்கு மயங்க் அகர்வால் மற்றும் கிளாஸண் இருவர் மட்டும் சராசரியான பங்களிப்பை தந்திருந்தாலும், ஹைதராபாத் அணி கடைசி இரண்டு ஓவர்களுக்கு 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கின்ற நிலைக்கு வந்துவிட்டது. ஆனாலும் கையில் இருந்த இரண்டு விக்கட்டுகளையும் இழந்து ஒரு பந்து மீதம் இருக்கையில் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

வெற்றிக்குப் பின் பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா
” இங்கு விளையாடியதில் எனக்கு பல இனிமையான நினைவுகள் இருக்கின்றன. மூன்று சீசன்களில் விளையாடி கோப்பையை வென்று இருக்கிறோம். பந்துவீச்சாளர்களை செட்டில் செய்வது எங்களுக்கு முக்கியமான ஒன்றாக இருந்தது. இதற்கு முன் ஐபிஎல் விளையாடாத ஒரு ஜோடி எங்களுக்கு கிடைத்துள்ளது. அவர்களை நாங்கள் பேக் செய்வது அவசியம். அவர்கள் தன் சொந்த திறமையில் வந்திருக்கக் கூடியவர்கள். நான் என் பேட்டிங்கை ரசிக்கிறேன். நான் செய்வதை விரும்புகிறேன். அடுத்த படிக்கு நான் போவேன் அது ஒரு வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும். ஆட்டத்தில் டெம்போவை முன்கூட்டியே கட்டமைப்பது குறித்து பேசி வருகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா “எங்களில் ஒருவர் கடைசி வரை நின்று பேட்டிங் செய்ய வேண்டும். நாங்கள் பெரிய ஸ்கோரை பெறும் வரையில் மகிழ்ச்சிதான். எங்களிடம் நீளமான பேட்டிங் வரிசை இருக்கிறது. அவர்கள் சுதந்திரமாக பேட்டிங் செய்வதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். திலக் வர்மாவின் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பந்துவீச்சாளர்களுக்கு விளையாடுவதில்லை. அவர் பந்துக்குதான் விளையாடுகிறார்!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசுகையில்
” அர்ஜுன் உடன் சேர்ந்து விளையாடுவது எக்சைட்மெண்டாக இருக்கிறது. வாழ்க்கை ஒரு முழு வட்டத்திற்கு வந்துவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதை நான் பார்த்திருக்கிறேன். அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாக புரிந்து கொள்கிறார். மேலும் அவர் அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். புதிய பந்தில் ஸ்விங் செய்கிறார். இறுதிக்கட்ட ஓவர்களில் யார்க்கர் வீசுகிறார்!” என்று கூறியிருக்கிறார்!