இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் உலக சாதனை படைக்க போகும் பந்து வீச்சாளர்!

0
2626

அயர்லாந்து அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடி வருகிறது . இதில் முதல் டெஸ்ட் போட்டியை இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது

இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது . மூன்றாம் நாளான இன்று இலங்கை அணி தேநீர் இடைவேளை வரை 357 ரன்களுக்கு ஒரு விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது . அந்த அணியின் நிஷான் மது ஷங்க்கா 165 ரன்கள்டனும் குசால் மெண்டிஸ் 83 ரன்கள்டனும் களத்தில் உள்ளனர் . கேப்டன் கருநரத்தனே 115 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார் .

- Advertisement -

முதலில் ஆடிய அயர்லாந்து அணி 492 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது . அந்த அணியின் பவுல் ஸ்டெர்லிங் 103 ரண்களும் கேம்பெயர் 111 ரண்களும் கேப்டன் பால்பிரின் 95 ரன்கள் எடுத்தனர் . இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இதன் மூலம் இவர் புதிய உலக சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார் . இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் பிரபாத் ஜெயசூர்யா 48 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் .

குறைவான டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளரான ஆல் வாலன்டைன் என்பவரின் வசம் இருக்கிறது . அவர் எட்டு டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி குறைவான டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர் என்ற சாதனையை வைத்திருக்கிறார் . தற்போது நடைபெறும் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெயசூர்யா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால் வாலன்டைன் சாதனையை முறியடிக்கலாம் .

ஜூலை மாதம் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கிய பிரபாத் ஜெயசூர்யா இதுவரை 48 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் . இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் ஆறு முறை ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார் . ஆஸ்திரேலிய அணியுடனான தனது முதல் டெஸ்ட் போட்டியில் முதல் எண்ணின் செல் 118 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் 59/6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 52/7 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 56/3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் குறைவான டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட் களை வீழ்த்திய ஸ்பின்னர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் .