டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதிய கோச்.? கம்பீருக்கு பதில் லக்ஷ்மன்.? பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்

0
320

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்து பெரிய அளவில் விமர்சனங்களை எதிர்கொண்டது.

இந்த சூழ்நிலையில் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு பதிலாக டெஸ்ட் பயிற்சியாளராக vvs லக்ஷ்மன் நியமிக்கப்படலாம் என்ற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து பிசிசிஐ முக்கிய அதிகாரி ஒருவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக டெஸ்ட் தொடரில் பெரிய அளவில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி அதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்து மோசமான விமர்சனத்தை எதிர்கொண்டது.

அதற்குப் பிறகு இங்கிலாந்தில் டிரா செய்தும் சொந்த மண்ணில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தோல்வி அடைந்தும் தொடர் வீழ்ச்சிகளை சந்தித்து வரும் நிலையில் தற்போது பயிற்சியாளர் கம்பியிருக்கு பதிலாக டெஸ்ட் பயிற்சியாளராக vvs லக்ஷ்மன் நியமிக்கப்படலாம் என்ற கருத்துக்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவசித் சைக்கியா மறுத்து அது உண்மை இல்லை என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இது முற்றிலுமே தவறான செய்தி இது வெறும் யூகத்தின் அடிப்படையில் ஆன செய்தியாகும். இதை சில புகழ்பெற்ற செய்தி நிறுவனங்களும் இந்த செய்தியை வெளியிட்டு வருகின்றன. இதில் துளியும் உண்மை கிடையாது இதை பிசிசிஐ முற்றிலுமாக மறுக்கிறது. மக்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க:இலங்கைக்கு எதிரான டி20 தொடர்.. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ரிஸ்வான், அபிரிடி நீக்கம்

இதில் பிசிசிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது முற்றிலும் யாரோ ஒருவரின் கற்பனை மட்டுமே ஆகும். மேலும் இதில் எந்தவித உண்மையும் கிடையாது. மேலும் இது உண்மையில் தவறான செய்தி மற்றும் ஆதாரமற்ற செய்தி என்பதை தவிர என்னால் வேறு எதையும் கூற முடியாது” என்று திட்டவட்டமாக இதனை மறுத்து பேசி இருக்கிறார்.

- Advertisement -