டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி தொடரில் இருந்து விலகிய நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் விளையாட மாட்டோம் என்று தடாலடியாக அறிவித்தது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதி இருக்கிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் வங்கதேச அணி t20 உலக கோப்பை தொடரில் விளையாட மறுத்ததை அடுத்து ஐசிசி தொடரிலிருந்து வங்கதேச அணியை நீக்கியது. அதற்கு பதிலாக ஸ்காட்லாந்து அணியை சேர்த்து t20 தொடரை நடத்தி வரும் ஐசிசிக்கு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தங்கள் விளையாட மாட்டோம் என்று வங்கதேச அணிக்கு ஆதரவாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை கையில் எடுத்தாலும் அது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தான் பெரிய இழப்பு ஏற்படுமே தவிர அது ஒருபோதும் இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலையும் ஒருபோதும் பாதிக்காது என்று பல முன்னாள் வீரர்கள் கூறி வந்தனர். இந்த சூழ்நிலையில் வங்கதேச அணி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறது.
இதில் வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அனுமில் இஸ்லாம் கூறும் போது “இந்த காலகட்டத்தில் வங்கதேசத்தை ஆதரிப்பதில் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் முயற்சிகளால் நாங்கள் நெகிழ்ச்சி அடைந்திருக்கிறோம். நமது சகோதரத்துவம் நீண்ட காலம் செழிக்கட்டும். நேற்று பாகிஸ்தானுக்கு நான் மேற்கொண்ட குறுகிய பயணத்தை தொடர்ந்து எங்கள் கலந்துரையாடல்களின் வரவிருக்கும் முடிவுகளைக் கருத்தில் கொண்டு முழு கிரிக்கெட் சூழல்களின் நலனுக்காக பிப்ரவரி 15ஆம் தேதி அன்று இந்தியாவுக்கு எதிராக ஐசிசி t20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.
இதன் மூலமாக பாகிஸ்தான் அணி வருகிற 15-ம் தேதி இந்தியா அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளது என்று எதிர்பார்க்கலாம்.