மழையால் ரத்தான போட்டி.. அமெரிக்காவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. பாகிஸ்தானுக்கு நடந்த பரிதாபம்.. அயர்லாந்தும் வெளியேறியது

0
349
USA

இன்று டி20 உலகக் கோப்பையில் ஃப்ளோரிடா மைதானத்தில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிக் கொள்ளும் முக்கிய போட்டி நடைபெற இருந்தது. இந்த நிலையில் அங்கு தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்காவுக்கு பெரிய அதிர்ஷ்டமும், பாகிஸ்தானுக்கு பரிதாபமும் நடந்திருக்கிறது!

இந்தியா இடம்பெற்று இருக்கும் ஏ பிரிவில் இந்திய அணி மற்றும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இரண்டாவது அணியாக ஏ பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற கூடிய வாய்ப்பில் இருந்தன.

- Advertisement -

மேலும் அயர்லாந்து அணிக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மீதம் இருக்கின்ற காரணத்தினால், இந்த இரண்டு போட்டிகளும் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட போட்டிகளாக மாறின. இந்த இரண்டு போட்டிகளுமே ஃப்ளோரிடா மைதானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகின்ற காரணத்தினால் அவுட்ஃபீல்டு மிகவும் ஈரமாக இருந்தது. இந்திய நேரப்படி இரவு 8 மணி முதல் மைதானத்தை சிறிய சிறிய இடைவேளைகளில் தொடர்ந்து கள நடுவர்கள் சோதித்து வந்தார்கள். ஆனால் அவுட்ஃபீல்டு ஈரம் காயவில்லை.

இத்தோடு சேர்த்து திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வெளிச்சமும் குறைந்தது. இந்திய நேரப்படி இரவு 11.46 மணிக்குள் போட்டி தொடங்க வேண்டும். இல்லையென்றால் போட்டி கைவிடப்பட வேண்டும். மேற்கொண்டு அவுட்ஃபீல்டு ஈரம் காயாததால், போட்டி கைவிடப்பட்டது. இதனால் அமெரிக்கா மற்றும் அயர்லாந்துக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உ.கோ பைனல் இந்தியா ஆஸிதான் வரும்.. ஆனா இந்த முறை இந்தியா விடாது காரணம் இதுதான் – பிராட் ஹாக் பேச்சு

அமெரிக்கா 4 போட்டிகளில் இரண்டு வெற்றி ஒரு தோல்வி ஒரு டிராவுடன் 5 புள்ளிகள் எடுத்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளில் இரண்டு தோல்வி ஒரு வெற்று உடன் இரண்டு புள்ளிகள் எடுத்து இருக்கிறது. அடுத்து கடைசி போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றாலும் அந்த அணி 4 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடியும். எனவே பாகிஸ்தான் பரிதாபமாக அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. மூன்றாவது போட்டியில் இரண்டு தோல்வி ஒரு டிராவுடன் ஒரு புள்ளி மட்டுமே எடுத்த அயர்லாந்தும் தொடரை விட்டு வெளியேறியது. மொத்தத்தில் மழை எல்லா சுவாரசியத்தையும் கெடுத்து விட்டது!