“17 வயது வீரரின் அபார ஆட்டத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தை பந்தாடிய நேபால்” – ஆசிய கோப்பைக்கு தகுதி!

0
445

முதலாவது ஆசிய பிரீமியர் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடைபெற்று வந்தது . இந்தத் தொடரில் ஆசியாவைச் சார்ந்த பத்து அணிகள் பங்கேற்று விளையாடின . இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதால் ஆசியா அணிகள் கடும் போட்டியுடன் இந்த தொடரில் பங்கேற்றன .

இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த போட்டி தொடரில் ஏ பிரிவில் முதல் இரண்டு இடங்களை பெற்ற நேபால் மற்றும் ஓமன் அணிகளும் தீப்பிடிவில் முதல் இரண்டு இடங்களை பெற்ற ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன .

- Advertisement -

முதலாவது அரை இறுதிப் போட்டியில் டக்வர்த் லிவீஸ் முறைப்படி நேபால் அணி குவைத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது . இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி ஓமன் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது .

நேபால் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நேற்று நடைபெற இருந்த நிலையில் வலையின் காரணமாக அந்த ஆட்டம் ரிசர்வ் தேதியான இன்று நடத்தப்பட்டது . இந்தப் போட்டி நேபால் நாட்டின் திரிபுவன பல்கலைக்கழக சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது .

டாசில் வென்று நேபால் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது . இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் நேபால் வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் 33.1 ஓவர்களில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தனர் . நேபால் அணியின் ராஜ் பன்சி 14 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளையும் சந்திப் லமிச்சேன் 34 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் . ஐக்கிய அரபு அமீரக அணியில் ஆசிப் கான் மட்டும் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாள் அணி 30.3 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இந்த வெற்றியின் மூலம் ஆசிய பிரிமியர் கோப்பையை கைப்பற்றியதோடு 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை போட்டிகளுக்கும் தகுதி பெற்று இருக்கிறது . நேபால் அணியின் 17 வயது இளம் வீரரான குல்சான் ஜா 84 பந்துகளில் 67 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 5 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும் . இவர் இந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார் .