இந்திய கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா டி20.. இந்திய அணி அறிவிப்பு.. திலக் வர்மா ரிட்டர்ன்.. 3 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் இதற்கு அடுத்ததாக தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்க டி20 கிரிக்கெட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நீண்ட நெடிய டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் சூழ்நிலையில் அதற்கு சற்று இடைவெளி கொடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. நவம்பர் 8ம் தேதி முதல் இந்த போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட உள்ள 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் கேப்டனாக செயல்படும் இந்தத் தொடரில் அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் மீண்டும் இடம் பிடித்திருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா மீண்டும் வாய்ப்பு பெற்றிருக்கும் நிலையில் பஞ்சாப் அணியில் அதிரடி பேட்ஸ்மானாக செயல்படும் ஜித்தேஷ் சர்மா மீண்டும் டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

மேலும் கொல்கத்தா அணியின் கடந்த ஐபிஎல் தொடரில் அதிரடி பேட்ஸ்மேனாக செயல்பட்ட ரமன்தீப் சிங் வாய்ப்பு பெற்று இருக்கிறார். மேலும் பந்துவீச்சாளர்களாக விஜயகுமார் வைசாக் மற்றும் யாஷ் தயால் போன்ற வீரர்களும் இந்திய அணியில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தவிர கடந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இந்த தொடரில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க:ஆஸி டெஸ்ட்.. 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு.. 2 புதிய வீரர்கள்.. எதிர்பார்த்த 2 வீரர்கள் இல்லை

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாட உள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி:

சூரியகுமார் யாதவ்(கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜித்தேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங், விஜயகுமார் வைசாக், ஆவேஸ்கான், யாஷ் தயால்.

- Advertisement -
Published by

Recent Posts