“நான் ரன்களை வாரிக் கொடுத்த பொழுது தோனி பாய் என்னிடம் இதைத்தான் சொன்னார்!” – துஷார் தேஷ்பாண்டே வெளியிட்ட புதிய தகவல்!

0
7428
Tushar

கடந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியான வேகப்பந்துவீச்சு கூட்டணி அமையாதது மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கி புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தையே தந்தது!

கடந்த ஐபிஎல் சீசனில் இருந்து இடதுகை வேகபந்துவீச்சாளர் முகேஷ் சௌத்தரியை இந்த சீசனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நம்பிக்கையான வீரராகக் கொண்டு வந்து இருந்தது.

- Advertisement -

காயத்திலிருந்து தீபக் சகர் திரும்பி இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி மிகச் சிறப்பாக அமையும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள்.

இந்தவேளையில் முகேஷ் சௌத்திரி காயம் காரணமாக யாரும் எதிர்ப்பாராத வகையில் ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அணியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஆகாஷ் சிங் அணிக்குள் வந்தார்.

இந்த நிலையில் தீபக் சகரும் நடுவில் காயம் அடைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி மிகவும் பாதிக்கப்பட்டது. அப்படியான நேரத்தில் சென்னை அணிக்காக விளையாடி இந்த சீசனில் ரன்கள் கொஞ்சம் அதிகம் விட்டுக் கொடுத்தாலும், 21 விக்கட்டுகளை வீழ்த்தி மறைமுகமான ஒரு ஹீரோவாக இருக்கிறார் துஷார் தேஷ்பாண்டே!

- Advertisement -

இந்த ஐபிஎல் சீசனில் துஷார் தேஷ் பாண்டே 16 ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி, 341 பந்துகள் வீசி, 564 ரன்களை 9.92 எக்கானமியில் விட்டுத் தந்து, 16.24 ஸ்டைரைக்ரேட்டில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

தனது கேப்டன் மகேந்திர சிங் தோனி தனக்கு எப்படியான நம்பிக்கையை அளித்து தன்னை சிறப்பாக செயல்பட வைத்தார்?! என்று துஷார் தேஷ் பாண்டே முக்கியமான தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது
“நான் சரியாகப் பந்து வீசாமல் ரன்களை அதிகம் விட்டுத்தந்த சமயத்தில் மகேந்திர சிங் தோனி பாய் என்னிடம் ‘இம்பேக்ட் பிளேயர் விதியால் 200+ ரன்கள் அடிக்கப்படுவது இயல்பானது என்றும், அணியில் எனது இடத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்’ என்றும் கூறினார்.

மகேந்திர சிங் தோனி பாய் ஒரு இளம் வீரர் என்ன எதிர்பார்ப்பாரோ அந்த உத்தரவாதத்தை அளித்து நம்பிக்கை கொடுத்தார்!” என்று கூறியிருக்கிறார். இதற்கான ட்விட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!