“நான் அணியில் சேர்ந்த நேரத்தில் டெண்டுல்கர் மிகுந்த அதிருப்தியில் இருந்தார்” – 16 ஆண்டுகளுக்குப் பின் மௌனம் கலைத்த முன்னாள் பயிற்சியாளர்

0
1897

இந்தியா அணியின் மாஸ்டர் பிளாஸ்டர்  சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் இன்று வரை இவர் அளவுக்கு சாதனை செய்த எந்த வீரர்களுமே இல்லை என்று கூறலாம் . சர்வதேச கிரிக்கெட்டில் 24 வருடங்களாக முடி சூடா மன்னனாக விளங்கியவர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.

1989 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக வேகப்பந்து வீச்சிக்கு சாதகமான சியால்கோட்  மைதானத்தில்   துவங்கிய சச்சினின் பயணம்  2013 ஆம் ஆண்டு வான்கடே 
மைதானத்தில் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது  முடிவுக்கு வந்தது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 33,000 ரன்களுக்கு மேல்  எடுத்து சாதனை படைத்துள்ள டெண்டுல்கர்  சர்வதேச போட்டிகளில் 100  சதம் அடித்த ஒரே வீரர் ஆவார்.

- Advertisement -

இத்தகைய சாதனை சாம்ராஜ்யமான டெண்டுல்கரின்  கிரிக்கெட் வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் நடுப்பகுதிகளில்  முதுகு பிரச்சனை மற்றும்  டென்னிஸ் எல்போ காயங்களில் இருந்து மீண்டு வந்த டெண்டுல்கர் 2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய அணியின் படுதோல்வியால்  மிகவும்  மனதளவில் சோர்ந்துள்ளார்.

இந்த நிகழ்வுகளைப் பற்றி 16 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிரீஸ்டன்.
இதுபற்றி நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்” நான் இந்திய அணியில் பயிற்சியாளராக சேர்ந்த நேரத்தில் சச்சின் டெண்டுல்கர் மிகவும் அதிருப்தியான ஒரு மனநிலையில் இருந்தார். அவர் இந்திய அணிக்கு வழங்க வேண்டிய ஏராளமான பங்களிப்பு அவரிடம் இருந்தது. ஆனால்  கிரிக்கெட்டை அந்த நேரத்தில் அவரால் ரசிக்க முடியவில்லை. மேலும் அந்த நேரத்தில் அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை காண ஓய்வை பற்றி சிந்தித்து கொண்டு இருந்தார். இதன் காரணமாக அவரை அடிக்கடி தொடர்பு கொள்வதும்  அவர் இந்திய அணிக்கு  வழங்கப்பட வேண்டிய பாரிய பங்களிப்பை பற்றி அவருக்கு உணர்த்துவதும் எனக்கு முக்கியமானதாக இருந்தது. மேலும் அவர் இந்திய அணிக்கு வழங்கிய பங்களிப்பை விட  வழங்கப்பட வேண்டிய பங்களிப்பு அதிகமாக இருந்தது “என்று கூறினார்.

மேலும் தனது பயிற்சி கால அனுபவங்களை பற்றி பேசிய கிரீஸ்டன் ” இவ்வளவு திறமையான இந்த அணியை வைத்து உலகையே வெல்லும் ஒரு அணியை உருவாக்குவதற்கு எவ்வாறான தலைமை பண்பு எனக்கு தேவை என்பது தான்  எனக்குள் கேள்வியாக இருந்தது . அந்த சூழ்நிலையில் எந்த ஒரு பயிற்சியாளருக்கும் அது ஒரு புதிராகத்தான் இருக்கும். நான் அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்ற சமயத்தில்  இந்திய அணி வீரர்களிடையே ஒரு பயம் இருந்தது. அவர்கள் அந்த நேரத்தில் மகிழ்ச்சியாக இல்லை. மேலும் ஒவ்வொரு நபரையும் புரிந்து கொள்வது எனக்கு முக்கிய பணியாக இருந்தது” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் கேரி கிரீஸ்டன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் தான்  எம் எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை மீண்டும் கைப்பற்றியது. இந்தக் காலகட்டத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா  சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி அங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.