உலக கிரிக்கெட்

நான் டி20 அணியில் இருந்தால்.. அனைவரது புருவமும் உயர்ந்திருக்கும்.. அதனால் இத பண்ண போறேன் – பவுமா பேட்டி

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான டெம்பா பவுமா தென்னாபிரிக்க டி20 அணியில் இல்லாதது ஆச்சரியம் அளிக்கவில்லை எனவும், ஒருவேளை டி20 அணியில் நான் இருந்திருந்தால் அது அனைவரது புருவத்தையும் உயர்த்தும் வகையில் அமர்ந்திருக்கும் என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணி 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பங்கு பெற்றபோது அந்த அணியின் கேப்டன் பவுமா மோசமான பேட்டிங் செயல்பாட்டினை வெளிப்படுத்தினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி அரை இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில் 5 போட்டிகளில் விளையாடிய பவுமா மொத்தமாக 70 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 112.90 மற்றும் 17.50 ரன்கள் சராசரியாக அமைந்தது.

இந்த மோசமான செயல்பாட்டின் காரணமாக இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அவரது பெயர் இடம் பெறவில்லை. கடைசியாக 2023 ஆம் ஆண்டில் மட்டுமே பவுமா டி20 தொடரில் விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறை 2024ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி இந்த உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை வந்து இந்திய அணி இடம் தோற்றது.

இருப்பினும் இறுதி போட்டி வரை சிறப்பாக செயல்பட்ட தென்னாப்பிரிக்க அணி வீரர்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் கிடைத்தது. இந்த சூழ்நிலையில் தான் டி20 அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய பவுமா தன் பெயர் டி20 அணியில் இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்றும் தான் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புவதாகவும் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் தென்னாபிரிக்க டி20 அணியில் இல்லாதது ஆச்சரியம் அளிக்கும் வகையில் இல்லை. நான் ஒரு வேளை டி20 அணியில் இருந்திருந்தால் பலரது புருவங்கள் உயர்ந்திருக்கும். இதனால் நான் அங்கு இல்லாததே நல்லது. இப்போது எனது கவனம் முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே உள்ளது. மேலும் என்னால் முடிந்த வரை மிகவும் சிறப்பாக அணிக்காக விளையாட முயற்சிக்கிறேன்.

இதையும் படிங்க:ஒரே தப்பை 2 முறை செஞ்சு.. WTC கோப்பையை இழந்தோம்.. இனி இப்படி செய்ய போறோம் – ஜெய் ஷா உறுதி

அடுத்த சில மாதங்களில் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. நான் நம்பக் கூடிய விஷயம் என்னவென்றால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் நான் நன்றாக விளையாடினால் மற்ற அனைத்து விஷயங்களும் தானாகவே மாறும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by