அபுதாபியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி கொண்டிருக்கின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்தது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ருத்துராஜ் 60 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ருத்ரதாண்டவம் ஆடினார்.
முதல் ஐபிஎல் சதத்தை ருசி பார்த்த ருத்துராஜ் கைக்வாட்
60 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் என 101 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் ருத்துராஜ் கைக்வாட் தனது ருத்ரதாண்டவத்தை அரங்கேற்றினார். இது அவருடைய ஐபிஎல் கேரியரின் முதல் சதம் ஆகும். அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சதமடித்த வீரர்களில், இளம் வயதிலேயே ( இருபத்தி நான்கு வருடம் 244 நாட்களில் ) சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றுச் சென்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக சதமடித்த ஒன்பதாவது வீரராகவும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்த ஏழாவது வீரராகவும் ருத்துராஜ் கைக்வாட் தன்னுடைய கால்தடத்தை பதித்துள்ளார்.
என் தனிப்பட்ட பெர்ஃபார்மன்ஸ்சை விட அணிக்கே முதல் முக்கியத்துவம்
அபாரமான சதத்தை குவித்த ருத்துராஜ் முதல் முன்னின்று முடிந்ததும் மகிழ்ச்சியுடன் பேசினார். இந்த போட்டியில் என்னுடைய தனிப்பட்ட பெர்ஃபார்மன்ஸ்சை விட அணியின் வெற்றியே முதலில் முக்கியம். எனவே அணியின் வெற்றியை நோக்கியே எனது ஆட்டம் எப்பொழுதும் இருக்கும்.
13 அல்லது 14 வது ஓவர் வரை சற்று நிதானமாக விளையாட நினைத்தேன். அதன்படி விளையாடி பின்னர் இறுதி ஓவர்களில் நன்றாக அனைத்து பந்துகளையும் எதிர் கொண்டேன். பந்து வரும் வேகத்திற்கு ஏற்றவாறு அதே சமயம் சரியாக ஒவ்வொரு பந்தையும் சரியாக டைம் செய்து அடிப்பதில் உறுதியாக இருந்தேன். மைதானத்தின் சுற்றளவை சரியாக பயன்படுத்திக் கொண்டு, சரியாக தன்னால் சிக்சர் அடிக்க முடிந்தது என்றும் விளக்கினார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக 160 மேல் டார்கெட் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். பேட்டிங் விளையாடிக் கொண்டிருந்த எனக்கு ஒரு கட்டத்தில் 170 அல்லது 180க்கு மேல் டார்கெட் அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது. இறுதியில் 190 என டார்கெட் செட் செய்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.