ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்ததன் மூலமாக தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது.
இதில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளரான குலதீப் யாதவ் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் பின்னணி குறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக முதல் வெற்றியைப் பெற்ற இந்திய அணி, அதற்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது வெற்றியை பெற்று தொடரில் வலுவான நிலையில் இருக்கிறது. இதில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் அதிக கவனத்தைப் பெற்று வரும் பவுலராக இருக்கிறார்.
முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர் இரண்டாவது போட்டியில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய பங்காற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் அவரது கடினமான காலத்தில் அவர் எடுத்துக்கொண்ட பயிற்சி விதங்கள் குறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக இருக்கும் அபிஷேக் நாயர் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் அவரிடம் பேசியபோது இந்த விஷயம் சுவாரசியமாக இருந்தது. அதாவது அவர் மணலில் பந்துவீசி தனது வேகத்தை அதிகப்படுத்த அதிக பயிற்சிகள் எடுத்தார். மேலும் அவர் தனது ரன் அப்பை மாற்றி ஓட வேண்டிய கோணத்தையும் மாற்றினார். முன்பு சற்று அதிகமாக குதித்து வீசுவார், இப்போது அது மாறிவிட்டது. இதனால் இப்போது அவர் அதிக வேகத்தை பெற முடிகிறது.
இதையும் படிங்க:கைகுலுக்கலனா தண்டிப்பிங்களா?.. எங்கள எதுவும் செய்ய முடியாது.. காரணம் இதுதான் – பிசிசிஐ மௌனம் தலைப்பு
மேலும் தனது பந்துவீச்சில் அதிக உந்துதளையும் பெற்றிருக்கிறார். மேலும் அவர் கடினமான நேரத்தையும் கடந்து வந்திருக்கிறார். நிறைய பேர் நிறைய விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கு தெரிந்த பயிற்சியாளர் ஒருவர் இருக்கும் போது ஒரு பவுலருக்கு எளிதான விஷயமாகும். புல்தி இப்போது பெறுவது ஆரம்பத்தில் இருந்தே அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த வெகுமதி” என்று பேசி இருக்கிறார்.






